FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, March 25, 2017

அபூர்வ திறமை கொண்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவி - காரணைப்புதுச்சேரியில் அதிசயம்


காரணைப்புதுச்சேரி, மார்ச் 20--காரணைப்புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருந்தும், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குகிறார்.ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட, மாணவியை நேர்காணச் சென்றிருந்தோம். விசாரிக்கையில், சிறந்த ஓவியத் தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை கண்ணால் காண்பதை, தனது பிஞ்சுக் கைவண்ணத்தில், நமது கண் முன் நிறுத்துகிறார்.அவரிடமே, அவர் குறித்த விளக்கங்களை கேட்ட போது, பதில் கூற மறுத்து, அமைதியாகவே இருந்தார். காரணத்தை அவரது ஆசிரியர் யமுனாவிடம் விசாரிக்கையில், அவர் பெயர் ஸ்ரீபவானி எனக் கூறினார். இதைச் சொல்ல, அந்த மாணவிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்... என எண்ணி முடிப்பதற்குள், ஸ்ரீபவானிக்கு, காது கேட்காததையும், வாய் பேச முடியாததையும் விளக்கினார் அவரது ஆசிரியர் யமுனா.ஆனால், இக்குறைகளால், மாணவியோ, அவரது பெற்றோரோ தளர்ந்து விடவில்லை. மாறாக, அவரது வயதுக் குழந்தைகளுடன் படிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீபவானியின் ஓவியங்களைக் கண்டு வியந்த நாம், காதுகளும், வாயும் செய்ய முடியாத சாதனைகளையும் சேர்த்து, இவரது கைகளே செய்துவிடும் என, வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

குடும்ப நிலை! காரணைப்புதுச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதிக்கு, 2008, செப்., 24ல் பிறந்த பெண் குழந்தை, இத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார் என, அப்போது, யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழந்தைக்கு, ஸ்ரீபவானி என பெயர் சூட்டிய பெற்றோர், குழந்தைக்கு, காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையை எண்ணி வருந்தினர். ஏழ்மையான குடும்பச் சூழலில், பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்ல, ஸ்ரீபவானி, காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். ஓவியம் மட்டுமின்றி, படிப்பிலும் சுட்டி. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இம்மாணவி. உடன் படிக்கும் மாணவர்களுடன், இயல்பாக விளையாடியும் மகிழ்கிறார் இம்மழலைச் செல்வம்!

எல்லாருக்கும் திறமை உண்டு!ஸ்ரீபவானி, மிக அழகாக ஓவியங்கள் வரைகிறாள். ஒரு முறை கண்ணால் கண்டதை, அப்படியே வரைந்து விடுவாள். அதிக திறமைசாலி. இதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், அவற்றை வெளிக்கொணர வேண்டும்.- ஆர்.செல்விதலைமை ஆசிரியர்

கடினம் இல்லை; பெருமை!அனைத்து மாணவர்களுடன் ஒன்றாகவே, ஸ்ரீபவானி அமர்கிறாள். அவளுக்கு, தனியாக பாடம் எடுப்பேன். அவளுக்கு புரியும் வகையில், சைகைகளாலும், எழுதிக் காட்டியும் பாடம் நடத்துவேன். இது கடினமான காரியமாக இல்லை. மாறாக, ஒருவித மனநிறைவைத் தருகிறது.- கே.யமுனாஸ்ரீபவானியின் வகுப்பு ஆசிரியர்

No comments:

Post a Comment