FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 2, 2017

எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்: காதுகேளாத மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

01.03.2017
சென்னை : ஆயிரம் விளக்கு சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆயிரம் விளக்கு சிறுமலர் கண் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது அப்பள்ளியின் மாணவ, மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுமலர் பள்ளிக்கு வரும்போது, ’ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் வந்தால் பலமுறை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்குமே’, என்ற எண்ணத்தோடு நான் பேசியதுண்டு.

இன்று எனக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். அகில இந்திய தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்கள். என்னதான் பல தலைவர்கள், பல அறிஞர்கள் என்னை வாழ்த்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் வாழ்த்துவதற்கு ஈடாக அவை எதுவும் இருக்க முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த சிறுமலர் பள்ளிக்கு வந்து உங்களுடைய வாழ்த்துகளைப் பெறுவதிலே தனி அக்கறை எடுத்துக்கொண்டு, இப்போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, உங்களுடைய நாட்டியத்தின் மூலமாக, உங்களின் கவிதைகள் மூலமாக, அதேநேரத்தில் வரவேற்புரை நிகழ்த்தி, அதில் இடம்பெற்று இருக்கக்கூடிய வார்த்தைகளின் மூலமாக எனக்கு நீங்கள் உங்களுடைய வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றீர்கள். அந்த வாழ்த்துக்கு உரியவனாக, என்றைக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன்.

இன்றைக்கு இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் எம்எல்ஏவாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். கொளத்தூர் தொகுதியில் நான் இப்போது எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னதான் கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு பணியாற்றுகிறேனோ இல்லையோ இந்த சிறுமலர் பள்ளியில் இருக்கக்கூடிய உங்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் முடிந்த எல்லா வகையிலும் துணை நின்று என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, கள்ளம் கபடம் இல்லாத இந்த அன்பான உள்ளம் கவர்ந்த உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment