சென்னை:
தேசிய அளவிலான, காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டி, சென்னையில், நாளை நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து, 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.துருக்கி சாம்சன்னில், சர்வதேச காது கேளாதோருக்கான தடகள போட்டிகள், ஜூலை 18 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான, தேசிய அளவிலான போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், மார்ச் 28ல் துவங்குகிறது.நான்கு நாட்கள் நடக்க உள்ள, இப்போட்டிகளில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 தடகள வீரர், வீராகங்கனைகள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, தமிழக காது கேளாதோர் விளையாட்டு சங்கம் தரப்பில் கூறியதாவது:துருக்கியில் நடக்க உள்ள, சர்வதேச காது கேளாதோருக்கான சீனியர் தடகள போட்டியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும், தேசியஅளவிலான போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. கடந்த, 1974ம் ஆண்டிற்கு பின், சென்னையில் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு, நெல்லையில், பிப்ரவரியில் நடந்தது. இதில், 120 தடகள வீரர்களும், 24 வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு சங்கம் தரப்பில் கூறப்பட்டது.

No comments:
Post a Comment