FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, March 3, 2017

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் அசத்திய காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள்!


01.03.2017
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் நடனக் கூத்தனான சிதம்பரம் தில்லை நடராஜர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்வதுதான் அந்தக் கலைக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. அவர்களின் பாக்கியமும்கூட. அதன்படி ஒவ்வொரு வருடமும் நடனக் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு வந்து, புதிதாக நடனக் கலையைக் கற்றுக்கொள்பவர்களும், நடனக் கலைஞர்களும் பல்வேறு நடனங்கள் மூலம் அக்கலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்கள், சினிமா நடிகைகளான பத்மா, சொர்ணமால்யா, பானுப்பிரியா எனப் பலர் இங்கு நடனமாடியிருந்தாலும், முதன் முறையாக மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் நடனமாடியதுதான் இந்த வருட நாட்டியாஞ்சலியில் சிறப்பு.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 36-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, தெற்கு ரத வீதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நான்காவது நாளான நேற்று, ஜி.வி.காது கேளாதோர் மற்றும் மணவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த நடனத்தை வெப்சைட் மற்றும் இண்டர்நெட்டில் கண்டுரசித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உத்தண்டி பாபு என்பவர், 5000 ரூபாயை அந்தக் குழுவுக்குப் பரிசாக அளித்தார்.

இது குறித்து அந்தக் குழுவின் பயிற்சியாளர் ப்ரியா கூறுகையில், "இதுமாதிரியான நாட்டியாஞ்சலி விழாவில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. பரதம் என்பது உடலும், உள்ளமும் ஒன்றிணையும் ஒரு தூய்மையான கலை. அதைக் கற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். சலங்கைப் பூஜைகளெல்லாம் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கு அப்படி எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்டோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதான். இதை, நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கடினமான பயிற்சியின் மூலம் சிவனின் தசாவதார நடனத்தை ஆடினோம். இதன்மூலம், பரதம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்திருக்கிறோம். அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்" என்றார் பெருமிதத்தோடு.



No comments:

Post a Comment