31.03.2017 சென்னை: சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டியில், தமிழக வீரர் கார்த்திக், தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில், தங்கப் பதக்கம் வென்றார்.தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான, 21வது விளையாட்டு போட்டி, சென்னையில் நடந்து வருகின்றன.
பெரியமேட்டில் நேற்று நடந்த, ஆண்கள் உயரம் தாண்டுதலில், தமிழகத்தை சேர்ந்த, கார்த்திக், 1.09 மீ., உயரம் தாண்டி, தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒடிசா வீரர், குர்சிம்ரன், இரண்டாம் இடத்தையும், கேரள வீரர், ராஜிவ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.ஆண்கள், 110 மீ., தடை ஓட்டத்தில், தமிழக வீரர், கார்த்திக், பந்தய துாரத்தை, 18.2 வினாடிகளில் கடந்து, தங்க பதக்கத்தை வென்றார். இரண்டாம் இடத்தை, கேரள வீரர், டின்டு, 19.3 வினாடிகளிலும், மூன்றாம் இடத்தை, ஒடிசா வீரர், தீபக் பிரதன், 21.3 வினாடிகளிலும் பிடித்தனர்.
நீளம் தாண்டுதல் ஆண்கள் பிரிவில், ரமேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். பெண்கள் உயரம் தாண்டுதலில், தமிழக வீராங்கனை, தேவி பிரியா; பெண்கள் குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை ரத்தினம், இரண்டாம் இடத்தை வென்றனர்.பெண்கள், 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், நிஷா, 400 மீ., ஆண்கள் பிரிவில், மணிகண்டன், 1,500 மீ., ஓட்டப் பந்தயத்தில் சுதிர்ஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வாலி பால் ஆண்கள் பிரிவில், காலிறுதி போட்டியில், தெலுங்கானா அணி, 2 - 1 என்ற செட் கணக்கில், தமிழக அணியை தோற்கடித்தது.

No comments:
Post a Comment