FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, April 20, 2019

செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

19.04.2019
விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகள், தாய், தந்தை இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் ஆகியோருக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, உடைகள், தங்குமிடம், புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லை. மேலும், விவரங்களுக்கு 94438 79401, 04146 224417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு பள்ளி நிர்வாகி ஜெயச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment