FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, April 17, 2019

`காது கேளாதவர்களுக்கு சைகை மொழி அவசியமில்லை!’ - பால வித்யாலயா `பாலபாடம்’


``இது விளையாட்டுப் பாடசாலையோ, ப்ரீ ஸ்கூலோ அல்ல. காது கேளாத குழந்தைகளுக்கு, தொடர்பு மற்றும் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட பிரேத்யேகப் பள்ளி. மூன்று வயதுக்கும் கீழுள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளுக்குத் தனித்தன்மை வாய்ந்த பயிற்சிகள் அளித்து, `இனி பேசவே முடியாது!' என்று கைவிடப்பட்ட பலரைப் பேசவைத்து சாதனைப் புரிந்திருக்கிறார்கள். அதுவும் அத்தனையும் இலவசமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று கூறிப் பூரித்தார், சென்னை அடையாறு பால வித்யாலயா காது கேளாதோர் பள்ளியின் மூலம் பயன்பெற்ற மாணவியின் தந்தை டாக்டர் கிருஷ்ணமாச்சாரி.

`மழலை மொழி', அனைவரும் வியந்து ரசிக்கும் புரியாத புதிர். செவித்திறன் குறைபாடு இருந்தால் பேசும் திறனிலும் குறைபாடு இருக்கும் என்பது, பலரின் தவறான கண்ணோட்டம். ஆனால், உண்மையில் அப்படி இருப்பதில்லை. காது கேட்காமலும் வாய் பேசாமலும் திணறிய பல குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்று சாதனை புரிந்திருக்கிறது இந்தப் பள்ளி. அவர்களோடு சிறு பயணம்...

``மூன்று வயதுக்குள் இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடிக்காவிட்டால், அதைச் சரிசெய்வது மிகவும் கடினம். இவர்களாலும் மற்ற குழந்தைகளைப்போல் இயல்பாகப் பேசி வாழ முடியும். என் மகளுக்குத் தமிழ் தெரியாது. அவள் படித்தது ஆங்கிலவழிக் கல்வி. மற்ற குழந்தைகளைவிட மோசமான செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்த என் மகள், இரட்டை எம்.எஸ் பட்டம் பெற்று, ஆப்பிள் நிறுவனம் வரை சென்று வேலைபார்த்துள்ளார். மற்ற குழந்தையைப்போலவே இவர்களையும் பார்த்துக்கொண்டால் போதும்" என்று கூறி நெகிழ்ந்தார் கிருஷ்ணமாச்சாரி.

இந்தப் பள்ளியின் இயக்குநர் சரஸ்வதி நாராயணசுவாமியிடம் பேசியபோது...

``ஆரம்பத்துல மூணு வயசுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருந்தது. அப்போ, நாங்க சில ENT மருத்துவர்களை அணுகினோம். `காது கேட்காத குழந்தைகளைப் பேசவைக்க முடியாதும்மா. இதெல்லாம் சாத்தியமில்லை'னு அவர்களே சொல்லிட்டாங்க. `நாங்க பார்த்துக்கிறோம். நீங்க அனுப்பிவைங்க'ன்னு கட்டாயப்படுத்தி ஆரம்பிச்சதுதான் இந்த முயற்சி.

இங்கு வந்து சேரும் குழந்தைகளோடு சேர்த்து அவர்களின் பெற்றோர் அல்லது பொறுப்பாளர் யாராவது ஒருவருக்கும் பயிற்சி கொடுக்கிறோம். ஏன்னா, இது சாதாரண கல்விமுறையைச் சொல்லிக்கொடுக்கிற பள்ளி கிடையாது. நாங்க சொல்லிக்கொடுக்கிற மொழிகளை, வாரத்துல ஏழு நாளும் பேசிப் பேசி அந்தக் குழந்தைக்கு பயிற்சி கொடுக்கிற பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் அதிகம் இருக்கு" என்றார்.

``இந்தக் குறைபாட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்தப் பயிற்சிகளைத் தொடங்க சரியான வயது எது?"

``பேர் சொல்லிக் கூப்பிடும்போது குழந்தை திரும்பவில்லை என்றாலோ, குக்கர் விசில் போன்ற திடீர் சத்தத்துக்கு எந்தவித எதிர்செயல் இல்லை என்றாலோ, உடனே அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போய் பரிசோதிக்கணும். இந்தக் காலத்துப் பெற்றோர்கள் அவங்க குழந்தைக்குக் குறைபாடு இருக்குனு ஒப்புக்கவே மாட்டேங்குறாங்க. `எல்லாம் கொஞ்சம் நாள்ல சரியாகிடும்'னு அலட்சியமா விட்டுடுறாங்க. அதுல இன்னும் சிலர், `இவங்க தாத்தா/பாட்டியெல்லாம் 5 வயசுலதான் பேச ஆரம்பிச்சாங்க அப்படித்தான் ஆகும்'னு விட்டுடுவாங்க. இப்படி நேரத்தைக் கடத்தினால், அந்தக் குழந்தையோட பேச்சுத்தன்மை குறைந்துபோய்விடும். பிறந்து 24 மணிநேரம் ஆன குழந்தையைக்கூட இப்போது பரிசோதனை செய்துபார்க்கலாம். அதுக்கான உபகரணங்கள் எங்ககிட்டயும் இருக்கு. அதனால், காலதாமதம் மட்டும் நிச்சயம் செய்யக் கூடாது" என்று கூறி எச்சரித்தார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.

``இந்தப் பயணத்தில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?"

``இதை ஒரு பள்ளின்னு யாருமே ஒப்புக்க மாட்டேங்குறாங்க. `பெற்றோர்களையும் வகுப்பறையில உட்காரவைச்சு `பிளே ஸ்கூல்' நடத்துறீங்களா?'ன்னுதான் பலரும் கேட்பாங்க. இதுபோன்ற குழந்தைகளோடு நாம எவ்வளவு பேசுறோமோ அவ்வளவு ஸ்மார்ட்டா இருப்பாங்க. ஆனா, அதுக்கான நிதானமோ பொறுமையோ இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு இல்லை. `குழந்தையே பேசலை. நாங்க பேசி என்ன பயன்?'னு கேட்பாங்க. ரொம்ப மனவேதனையோடு வருவாங்க. குழந்தைகளை வெளியில கூட்டிட்டுப் போறப்போ, மத்தவங்க என்ன நினைப்பாங்களோனு `hearing aid' சாதனத்தைப் போட்டுவிட மாட்டாங்க. இது ரொம்பவே தவறான விஷயம். இதுபோன்ற சூழ்நிலையில குழந்தைகளைவிட பெற்றோர்களுக்குத்தான் அதிகப்படியான கவனம் எடுத்து அவங்களுக்குத் தேவையான ஆலோசனை வகுப்புகளும் நடத்துவோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தன்னம்பிக்கையை உண்டுபண்றதே எங்களுக்கு மிகப்பெரிய சவால்" என்கிறார் பள்ளியின் துணை முதல்வர் மீரா சுரேஷ்.

``இவர்கள் எளிதில் கற்றுக்கொள்ள எந்த மொழி சிறந்தது?"

``நாங்கள் சைகை மொழியை தவறுனு சொல்லல. ஆனா, அந்த மொழி தெரிஞ்சவங்ககிட்ட மட்டும்தான் இவங்க உரையாட முடியும். அதனால முடிஞ்சளவுக்கு சைகை மொழியை தவிர்ப்பது சிறந்தது. இவர்களையும் மற்ற குழந்தைகளைப்போலவே பார்க்கணும். இந்தப் பள்ளியில் ஆங்கிலவழி கல்விதான் கத்துக்கொடுக்கிறோம். அவங்க பெரும்பாலும் இந்த மொழியைத்தான் இந்தப் பள்ளியைவிட்டு வெளியே போனாலும் பயன்படுத்துவாங்க. அதைத்தான் வீட்டிலும் பேச வலியுறுத்துறோம். ஆங்கிலம் பேசத் தெரியாத பெற்றோர்களுக்கும் இலவசமா நாங்களே வகுப்புகள் எடுக்கிறோம். முதலில் ஏதாவது ஒரு மொழியை முழுமையா கத்துக்கிட்டா, மற்றதெல்லாம் `லிப் ரீடிங்' மூலம் எளிதில் கத்துப்பாங்க" என்றார் சரஸ்வதி நாராயணசுவாமி.

இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் நன்கு தேர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் பயிற்சி மையத்தையும் நடத்திவருகிறார்கள். ஒரு வகுப்பில் நான்கு மாணவர்கள் மட்டும் இருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியைப் பதிவுசெய்து, தனிக்கவனம் எடுத்துக்கொள்கின்றனர். அங்கும் இங்கும் சிட்டாய்ப் பறந்துகொண்டிருந்த குழந்தைகளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றேன்.

No comments:

Post a Comment