FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, April 20, 2019

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகிவிட்டது... ப்ளஸ் 3 ரிசல்ட் எப்போது தெரியுமா?


ப்ளஸ் டூ தேர்வு முடிவு தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ப்ளஸ் 3 தேர்வு முடிவுக்காக சில மாணவர்கள் காத்திருக்கின்றனர். ப்ளஸ் டூ தெரியும் அதென்ன ப்ளஸ் 3 என்கிறீர்களா?

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் பாடங்களையும் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிளஸ் டூ தேர்வுவரை ஒரு மொழிப்பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்கள் இரண்டு மொழிப்பாடத்துடன் மொத்தம் 600 மதிப்பெண்ணுக்குத் தேர்வெழுதுவார்கள். ஆனால் செவித்திறனற்ற மாணவர்கள், ஒரு மொழிப்பாடத்துடன் 500 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வெழுதுவார்கள். அப்படி தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது.

அதனால் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற செவித்திறனற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தை மட்டும் ஓராண்டுக்குப் படித்து தனித்தேர்வர்களாக தேர்வெழுதுவார்கள். ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, ஓராண்டு ஆங்கிலப் பாடத்தை மட்டும் படித்துத் தேர்வெழுதுவதால் அதை `ப்ளஸ் 3' படிப்பு என்று அழைக்கின்றனர்.

செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென்று தனி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் செயல்படும் சிறுமலர் செவித்திறனற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா ரோஸலின்ட் கூறும்போது, ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறனற்ற மாணவிகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்ததும் ப்ளஸ் 3 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவிகளுக்கு ஆங்கில மொழியில் `A' வில் இருந்து கற்றுக்கொடுத்து, பத்தாம் வகுப்பு பாடத்தை தேர்வெழுத வைக்கிறோம். ஆங்கிலம் தெரியாததால், பல வாய்ப்புகளைச் செவித்திறனற்ற மாணவிகள் இழக்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். இந்த ஆண்டும் 19 செவித்திறனற்ற மாணவிகள் ப்ளஸ் 3 தேர்வை எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்" என்றார் அவர்.

No comments:

Post a Comment