06.04.2019
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாளர்வது குறித்த சிறப்பு பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 4,122 ஓட்டுச்சாவடிகளில், 20,788 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, 279 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 இடங்களில், நேற்றும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் எப்படி நடந்துகொள்வது; அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படி புரிந்து கொள்வது குறித்து, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்டம் மழுவதும், 21 ஆயிரத்து, 193 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,743 வாக்காளர்கள் பார்வையற்றோர்; 3,956 வாக்காளர்கள் காதுகேளாதோர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள்வது குறித்த பயற்சி, நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள, 16 மையங்களில், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கென, சிறப்பு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் கூறுவதை, செய்கை மூலம் புரிந்து கொள்ள சில யோசனைகளை அவர்கள் கற்று தந்தனர்.காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, கலெக்டர், பொன்னையா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment