FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, April 13, 2019

சைகை மொழிக்கான புதிய செயலி அறிமுகம் செய்தது, 'எல் அண்டு டி'

11.04.2019
சென்னை : காது கேளாதோரின் சைகை மொழிக்கான புதிய செயலியை, 'எல் அண்டு டி' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கட்டுமான துறையில் முன்னிலை வகிக்கும், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம், சமுதாய சேவை பிரிவில், பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காது கேளாதோர் அறக்கட்டளையுடன் இணைந்து, காது கேளாதோர், மற்றவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் கலந்துரையாட வசதியாக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் அறிமுக விழா, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
சைகை மொழி செயலி குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின், சமுதாய சேவை பிரிவு மூத்த மேலாளர், ராஜசேகர்பாண்டியன், காது கேளாதோர் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, ரம்யா மெரியால் ஆகியோர் கூறியதாவது:உலகில், காது கேளாதோர் எண்ணிக்கை அதிகம் உடைய நாடு இந்தியா. இதில், மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, சைகை மொழி, உள்ளூர் மொழி ஆகியவை இணைந்த, இரு மொழிக் கல்வி கிடைக்கிறது.இந்த செயலி வழியாக வாய் பேசாதோர், காது கேளாதோர் மற்றும், பொதுமக்களும் சைகை மொழியை மிக எளிதாக கற்கலாம்.
இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள, 5,000 சைகைகள், ஆங்கில சொற்றொடர்கள், வீடியோக்கள், வரைபடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த செயலியை, மற்றவர்கள் கற்பதன் வாயிலாக, மாற்று திறன் கொண்டவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் பேச முடியும். இந்த செயலியில் தொடர்ந்து, பல வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பள்ளிகளிலும், இந்தியாவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளிலும் இந்த செயலிக்கான, 'பென் டிரைவ்'வை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். கூகுளில் சென்று, 'DEF-ISL' என, 'டைப்' செய்து, செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment