FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, April 7, 2019

காது கேளாத, பேச முடியாதவரிடம் கொள்ளை; ஆடவருக்கு 3 ஆண்டு சிறை, 12 பிரம்படிகள்

06.09.2019
காது கேளாத, வாய் பேச முடியாத 53 வயது பெண்ணிடம் கொள்ளை அடித்த 29 வயது டான் மின் பின்னுக்கு மூன்றாண்டு சிறை, 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணிடமிருந்து திருடிய பொருட்களில் சிங்கப்பூர் காதுகேளாதோர் சங்கத்தின் உறுப் பினர் அட்டையைப் பார்த்த பிறகும் கூட அவரிடமிருந்து திருடிய பொருட்களை அவரிடம் டான் ஒப்படைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரவு 8.50 மணியளவில் பேருந்து நிறுத்தத்தி லிருந்து வீட்டுக்குச் சென்றுகொண் டிருந்த திருவாட்டி சான் மெய் லெய்யைப் பின் தொடர்ந்த டான், சீமெய் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 133ன் மின்தூக்கியிலும் அவரைத் தொடர்ந்தார்.
ஒன்பதாவது மாடியில் மின் தூக்கிக் கதவு திறந்தபோது வெளியேறுவதுபோல நடித்து மீண்டும் மின்தூக்கிக்குள் நுழைந்த டான், திருவாட்டி சானிட மிருந்து கைப்பையைப் பிடுங்க முயற்சி செய்தார்.
ஆனால், திருவாட்டி சான் தன்னுடைய பையைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தார்.
அப்போது திருவாட்டி டானை மின்தூக்கியின் சுவற்றில் தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி டான் தப்பிச் சென்றார்.
கத்தி யாரிடமும் உதவி கோர முடியாததால், உறவினரின் உதவியை நாட வீட்டுக்கு விரைந் தார் திருவாட்டி சான்.
திருவாட்டி சானின் பணப் பையில் இருந்த யுஓபி வங்கி அட்டை, பணம் நிரப்பப்பட்ட அட் டைகள் 2, ஒரு பேஷன் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரது பணப்பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிய டானை, மின் தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி யின் உதவியுடன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் போலிசார் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்காக சாங்கி பொது மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதற்கான மருத்துவச் செல வாக $800 வழங்கும்படி டானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பணத்தைச் செலுத்த இயலாவிட்டால் அவர் மேலும் ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


No comments:

Post a Comment