FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, April 13, 2019

தைரியமாக வரலாம்!


உடுமலை : மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்தல் உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை, 1,2,3 என 1,381 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதி யிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,318 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. 

உடுமலை தொகுதிக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, வித்யாசாகர் கல்லுாரியிலும் நடந்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், காங்கயம் தொகுதிகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், ஓட்டுச்சாவடிகளின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டலம் வாரியாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' குறித்து மண்டல அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவுக்காக, படிவம், 13 ஏ, 13 பி, 13 சி. ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான பேலட் பேப்பர்கள் கவரில் வைத்து வழங்கப்பட்டது.படிவம் வழங்கவும், சான்று அளிக்கவும் இரண்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், படிவத்தை பெற்று பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டியில் போட்டனர். அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்ற தொகுதிகளுக்கு பணிக்கு சென்றுள்ளனர்.இந்த தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் கமிஷன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சாய்வு தளம் அமைக்கப்பட்டு, சக்கர நாற்காலிகள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்து வர தனி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, 93852 86604 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில், வாக்காளார் அடையாள அட்டை எண், தொகுதி, பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். தனியாக உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் அப்' குழு மூலமும் அறிந்து, மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment