FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 20, 2019

"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி!

20.04.2019
பிளஸ் டூ தேர்வில் 500-க்கு 428 மதிப்பெண் பெற்று, படித்த பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் திலகவதி. தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சி, ஆனந்தம், பூரிப்பு என அத்தனை உணர்வுகளையும் மௌனம் என்ற ஒற்றை மொழியில் வெளிப்படுத்துகிறார். பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்டு, அதனால் பேச்சுத்திறனையும் இழந்தவர் திலகவதி. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள செவித்திறனில்லாதோர் பள்ளியில் படித்து, பிளல் டூ-வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

பள்ளியின் முதல்வர், ஆசிரியர் என்று அனைவரும் திலகவதியைப் பாராட்டிக்கொண்டிருக்க அவரோ, தேர்வில் தோல்வியடைந்ததால் அழுதுகொண்டிருந்த சக மாணவியைப் பெரும்பாடுபட்டு தேற்றிக்கொண்டிருந்தார். மௌன மொழி பேசும் மடந்தையின் அம்மா கற்பகத்திடம் பேசினோம். "எங்களுக்கு சொந்த ஊரு சிவகங்கை. திலகவதிதான் எங்களுக்கு முதல் குழந்தை. அவளுக்கு இரண்டு வயசு இருக்கும்போது வீட்ல ஒருநாள் ஒரு டப்பா தவறி கீழ விழுந்துச்சு. எல்லாரும் என்ன சத்தம்னு பார்த்தாங்க. ஆனா திலகவதி மட்டும் திரும்பவே இல்ல.

அப்போதான் அவளுக்கு காது கேட்கலன்னு எங்களுக்குத் தெரிய வந்துச்சு. பல டாக்டர்களைப் பாத்தோம். 'அவளுக்கு மூளை செயல்திறன் நல்லா இருக்கு... காது கேட்கிறதுக்காக சிகிச்சை செய்தா, மூளைத்திறன்ல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால, காதுக்கு ட்ரீட்மென்ட் பாக்குறதவிட்டுட்டு குழந்தையைப் படிக்க வைங்க'ன்னு சொல்லிட்டாங்க. எங்க பகுதியில இதுபோல ஸ்கூல் இல்ல. அதுனால, என் பொண்ண படிக்கவைக்கணும்னு சென்னைக்கு வந்தோம்.

பத்தாவதுலயும் திலகவதிதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எப்பவும் துறுதுறுன்னு இருப்பா. எங்க சொந்தக்காரங்க எல்லாம் என் பொண்ணுக்கு காது கேட்கலையேன்னு வருத்தப்படுவாங்க. ஆனா, நாங்க ஒருநாளும் அப்படி நினைச்சதேயில்லை. அவகிட்ட இருக்கிற துறுதுறுப்பு அவ குறையை மறைச்சிரும்.

நான் என் அத்தை பையனைத்தான் கல்யாணம் செஞ்சிகிட்டேன். நெருங்கின சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டதாலதான் குழந்தைக்கு காது கேட்காமப் போயிருச்சு. என் வீட்டுக்காரரு டிரைவரா வேல பாக்குறாரு. அவர் பத்தாவது வரை படிச்சிருக்காரு. நான் வீட்டு வேலை செய்றேன். நாங்க ரெண்டு பேரும் படிக்காததால, என் பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சி இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்.

படிக்கிறதுல ரொம்ப ஆர்வம். சிறு வயசுலயே காலையில நாலு மணிக்கு எழுந்து ஹோம் வொர்க் செய்வா, அது இப்போ வரைக்கும் தொடருது. டி.வி. பாத்தாகூட கையில பாடப்புத்தகம் இருக்கும். படிப்புல உள்ள ஆர்வம்தான் அவளுக்கு இவ்ளோ மார்க் வாங்கிக் கொடுத்திருக்கு. முதல் மார்க் வாங்கி எங்களையும் பெருமைப்படுத்திட்டா.

ஜெயலலிதா இறந்த சமயத்துல ஒருநாள் என்கிட்ட வந்து, 'எனக்கு ஜெயலலிதா போல வரணும்னு ஆசை'ன்னு சொன்னா. 'நாம இருக்கிற நிலையில அதெல்லாம் சாத்தியம் இல்ல'ன்னு சொன்னேன். அது அவளுக்கும் தெரியும். அதனால, நான் எந்தத் துறைக்குப் போனாலும் ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்னு சொல்றா. வங்கி அதிகாரியா வரணும்னு இப்போ சொல்லிட்டு இருக்கா..."என்றார் கண்களில் சந்தோஷம் மின்ன.

No comments:

Post a Comment