கோவை 2019 ஏப்ரல் 4 ;காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது
சிறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. பிறப்பின் போதே காது கேளாத மற்றும் வாய்பேச இயலதா 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சைகளை இலவசமாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பிறந்துள்ள 200 குழந்தைகளுக்கு அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து குழந்தைகளும் இளைமை பருவத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடல்களை பாடி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ஆனந்த் தங்களது குழந்தைகள் மாட்டுமல்லம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இம்மாதிரியான இலவச அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment