12.04.2019
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வாரம் ஒருமுறை தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாரம் ஒருமுறை பேட்டி அளித்து வருகிறார். இந்த செய்தி காது கேளாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் உள்ள ஆசிரியர் சுரேஷ் தலைமை செயலகம் வந்து, தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளிக்கும்போது, காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கை செய்கை மூலம் விளக்கி கூறினார். இதன்மூலம் காது கேளாதவர்களும் தேர்தல் செய்தியை டிவியை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.
No comments:
Post a Comment