FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, May 3, 2014

1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

 சென்னை, மே 3–
1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேருக்கு அந்தஸ்து உயர்வு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சேர்ந்த 6 பேருக்கு முதன்மைச் செயலாளராக அந்தஸ்தை உயர்த்தி உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நாயருக்கு, முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

பொதுப்பணித் துறை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே.பணீந்தர ரெட்டி, அந்த துறையின் முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்படுகிறார். பொதுப்பணித் துறையின் செயலாளர் எம்.சாய்குமார், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் பி.சிவசங்கரன், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மத்திய அரசுப் பணியான தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள டி.எஸ்.ஜவஹருக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது.

எம்.பி.நிர்மலா
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, அந்த துறையின் முதன்மைச் செயலாளராக அந்தஸ்து உயர்த்தப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் அந்தஸ்து
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்.லலிதா (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்), பிரவீன் பி.நாயர் (ஓசூர் துணை கலெக்டர்), சங்கர்லால் குமாவத் (நாகர்கோயில் துணைக் கலெக்டர்), சுபோத் குமார் (திருக்கோவிலூர் துணைக் கலெக்டர்), அஜய் யாதவ் (கோவை வணிகவரிகள் இணை கமிஷனர்), ராஷ்மி சித்தார்த் சகாதே (பொள்ளாச்சி துணை கலெக்டர்) ஆகியோருக்கு கடந்த ஜனவரி 1–ந் தேதியில் இருந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதே பணியில் தொடருவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment