FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, May 5, 2014

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,


ஆசியாவிலேயே முதல் முறை! காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,வாய் பேச முடியாத, பட்டப் படிப்பை ஏற்படுத்திய, முகமது இப்ராஹிம்: நான், சென்னை மாநில கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்களிடம் பேச்சு கொடுக்கும் வரை, அவர்களின் குறைபாடு வேறு யாருக்கும், வெளிப்படையாக தெரியாது. சாதாரண மாணவர்களைப் போலவே, அவர்களும் இருப்பர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற பட்டப் படிப்புகள், வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு இல்லை. இதனால், ஆசியாவிலேயே முதல் முறையாக, வாய் மற்றும் செவி
திறன் குறைந்தவர்களுக்கு, பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவை, தமிழக அரசு உதவியுடன், 2007ல், மாநில கல்லூரியில் ஆரம்பித்தோம். பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடமிருந்து, அடையாள அட்டை பெற்றிருப்பவர், இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைவான இடங்களே உள்ளதால், அதிக மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்கிறோம். மூன்றாண்டுக்கான கல்வி கட்டணம், 1,265 மட்டுமே. அரசின் மானியம் மூலம், "ஹியரிங் எய்டு, ஸ்காலர்ஷிப்' போன்றவற்றை வழங்குகிறோம். "ஹாஸ்டல்' வசதியும் அருகில் உள்ளது. இவர்களுக்கு, சாதாரண மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்றே இருந்தாலும், செய்முறை தேர்வை தவிர்த்து, மற்ற அனைத்தையும் எளிதாக்கியுள்ளோம். புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்பதால், முக பாவனை, உதடு அசைவு, சைகை மொழி மூலம், பாடங்களை பொறுமையாக நடத்துகிறோம். தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மூலம், கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறோம். எங்களிடம் படித்த மாணவர்களில் பலர், பெரிய ஷாப்பிங் மால்களில் கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவிலும், கே.எப்.சி., ஸ்பென்சர் போன்ற நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். கல்லூரியில் படித்து கொண்டே, பகுதி நேரமாகவும் பணியாற்றலாம்.

No comments:

Post a Comment