FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 23, 2022

பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகன் தலையணையால் அமுக்கி கொலை

22.01.2022
சென்னை: பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகனை பெற்ற தாயே தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷோபா (31). இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டையை ேசர்ந்த மென்பொறியாளர் தினேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஹிர்த்திக் என பெயர் வைத்து மகனை ஆசையாக வளர்த்து வந்தனர். ஆனால் ஒன்றரை வயது கடந்தும் ஹிர்த்திக் பேசவில்லை. பிறகு தனது மகனுக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவன் வாய் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மகன் ஏன் பேசவில்லை என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த ஷோபா, ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரது கணவர் தினேஷ்குமார் தனது மனைவியை பெங்களூருவுக்கு அழைத்து சென்று மனநலம் பாதிப்புக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி ஷோபா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கணவர் வீட்டில் இருந்து தனது வாய் பேச முடியாத மகனுடன் அண்ணா சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். ஷோபாவின் தாய், அண்ணா சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்த ஷோபாவின் தாய், வெகு நேரம் கதவை தட்டியும் ஷோபா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷோபா அறையில் உள்ள மின்சிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அருகில் உள்ள கட்டிலில் வாய் பேச முடியாத மகன் தலையணையால் அழுத்திய நிலையில் உயிரிழந்து கிடந்தான். இதை பார்த்து ஷோபாவின் தாய் அலறி துடித்தார். தகவலறிந்த அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஷோபா மற்றும் தலையணையால் கொலை செய்யப்பட்ட 4 வயது மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் வாய் பேச முடியாதால் மனமுடைந்த தாய், மனநலம் பாதிக்கப்பட்டு தனது மகனை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




No comments:

Post a Comment