திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செங்கான். இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கொளஞ்சி (வயது 42) கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகன் சிலம்பரசன் (26), மோனிஷா (24), வாய் பேசாத மகள் நிவேதா (21) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் கொளஞ்சி புகார் மனு அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்பவரிடம் குடும்ப செலவுக்கு கொளஞ்சி ரூ. 50 ஆயிரம் 3 வட்டி வீதம் பணம் வாங்கினேன். இந்த பணத்துக்கு முதல் தவணையாக ரூ. 45 ஆயிரம், 2-வது தவணையாக மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற 30 ஆயிரம், 3-வது தவணையாக தனது மகன் வேலை செய்த ரூ.15ஆயிரம், 4-வது தவணையாக வேப்பூரில் வசிக்கும் தனது மகள் மோனிஷா கணவர் மூலம் 10 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. ஒரு லட்சம் கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் கிருஷ்ணவேணி மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். இதற்கு பயந்து எனது மகனை இங்கே விட்டுவிட்டு எனது வாய் பேசாத மகளை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு பிழைப்பு தேடி சென்று விட்டேன். தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment