FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 23, 2022

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு வாய் பேச முடியாத, காது கோளாத சிறுமி கட்டாய திருமணம் பெற்றோர் உட்பட 5 பேர் கைது

19.01.2022
ஈரோடு: ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டிசம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறு வயது திருமணம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதற்கு உறுதுணையாக இருந்ததாக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



No comments:

Post a Comment