26.01.2022
கோவை:சொத்துக்களை அபகரித்ததோடு, தினமும் அடித்து துன்புறுத்தும் மகன்கள் குறித்து, காது கேட்காத மூதாட்டி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் ராஜம், 65. இவர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:என் கணவர் மணி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவரின் சுய சம்பாத்தியத்தில் கேரளா, பாலக்காட்டில் ஒன்னேகால் ஏக்கர் தோட்டம், 4 கடைகள் மற்றும் கோவை சலீவன் வீதியில் வீடு உள்ளது.கணவர் இறந்தபின், 3 மகன்களும் சேர்ந்து, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டனர். போலி உயில் தயாரித்து எனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை, மகன்கள் மற்றும் அவரது மனைவிகள் அடித்து கொடுமை செய்கின்றனர்.போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சரியாக காது கேட்காது. பல்வேறு உடல்நல கோளாறு இருக்கிறது; கவனிக்க யாரும் இல்லை. கணவரின் சொத்துக்களை, 5 பாகங்களாக பிரித்து, எனக்குரிய பகுதியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment