FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, January 28, 2022

இந்திய காதுகேளாத பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதியர் - பாராட்டு மழையில் நனைத்த நெட்டிசன்கள்!

27.01.2022
‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியான வீடியோ அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தங்களுக்கான செல்ல மகளை வெளிநாட்டு தம்பதியர் தத்தெடுத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஷான் மைக்கேல் மைலியஸ் மற்றும் ஜோஹனா ஜோ மைலியஸ் ஆகிய தம்பதியர்தான் இந்திய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். இதில், சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினர்.

இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, ‘நைனா’ என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில், பாராட்டத்தகுந்த விஷயம் என்ன என்றால், நைனா செவித்திறன் பாதிப்பு உடையவர் என தெரிந்தும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மைக்கேல் - ஜோஹனா தம்பதியர் தத்தெடுத்துள்ளனர் என்பதே.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு “ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியான மரபணு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இதில், குழந்தையை தத்தெடுப்பது குறித்த தங்களின் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நைனாவின் மூத்த சகோதரி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.இந்திய குழந்தையை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதியர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் 31,000 பேரின் இதயங்களை (லைக்குகள்) இந்த வீடியோ கொள்ளை அடித்தது. ”சோ ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், இதயம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் போன்ற எமோஜிகளை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பதிவர் வெளியிட்ட கமென்டில், ”ஒரு குடும்பத்துக்கான பயணம் எத்தனை உணர்ச்சிகரமாக உள்ளது. கடவுள் இவர்களை ஆசிர்வதிப்பாராக’’ என்று கூறப்பட்டுள்ளது. ”அன்புக்கு எல்லை இல்லை’’ என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள் கூட, மருத்துவ சிகிச்சை மூலமாக தங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள நீண்ட நெடிய முயற்சிகளை மேற்கொள்வர். எதுவுமே கை கூடாத நிலையில்தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவுக்கு வருவார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஏற்கனவே தங்களுக்கு என ஒரு குழந்தை கொண்ட மைக்கேல் - ஜோஹனா தம்பதியர், மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முன்வந்தது அனைவராலும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. குறிப்பாக, செவித்திறன் பாதிப்பு கொண்ட குழந்தையை தத்தெடுத்து, மனிதம் போற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment