FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 28, 2025

3-yr-old deaf-mute boy reunited with parents after rescue at railway station


26.04.2025
Nagpur: A three-year-old deaf and mute boy, who was stranded for two days at Nagpur railway station, was reunited with his parents thanks to the swift and compassionate efforts of the Railway Protection Force (RPF).

The child was first spotted alone near the two wheeler parking area adjacent to Platform No. 1 around 12noon on April 23 by an on-duty woman constable of the RPF. The boy appeared lost and distressed, and attempts to communicate revealed that he was unable to speak or hear.

Realising the child had special needs, the constable immediately brought him to the RPF post for safety. Following established procedures under the 'Operation Nanhe Farishte' Initiative, aimed at helping lost or abandoned children, the RPF contacted the Child Welfare Committee (CWC) team. The child was handed over to their care after initial checks and documentation.

Despite their best efforts, the boy could not communicate his name or address, making it difficult to trace his family. Meanwhile, back at the station, his parents both daily wage labourers were frantically searching for him. A day later, they approached the RPF help desk to report their missing son. According to a senior RPF official, the officers showed the couple a photograph of the rescued child. The moment they saw the picture, they identified him as their missing son.


மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - காது கேளாத, வாய் பேச முடியாத வீரர்கள் போட்டியில் பங்கேற்பு



28.04.2025
கோவையில் மாற்றுத்தினாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் காது கேளாத, வாய் பேச முடியாத வீரர்கள் பங்கேற்றனர்.

கோவையில் மாவட்ட அளவிலான நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் காது கேளாத, வாய் பேச இயலாத, வீர்ர்கள் அசத்தலாக விளையாடினர்.

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பாக கோவை கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது சீசனாக நடைபெற்ற காது கேளாத வாய் பேச இயலாதோர்களுக்கான கோவை கிரிக்கெட் லீக் போட்டி பெரியநாயக்கன்பாளையம் பாளையம் பகுதியில் நடைபெற்றது.

நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்ற இதில் இளைஞர் அணியினர், மூத்த அணி மற்றும் பெண்கள் தனி பிரிவு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

பல்வேறு விளையாட்டுகளில் சாதித்து வரும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் வெற்றி தோல்வியை கடந்து போட்டியில் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இதில் இளையோருக்கான போட்டிகளில் உக்கடம் கிரிக்கெட் டவர்ஸ் மேட்டுப்பாளையம் கிரிக்கெட் தண்டர்ஸ், காந்திபுரம் கிரிக்கெட் கிராஸ்கட் ரோடு ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.

இதே போல லெஜன்ட்ஸ் பிரிவில் சரவணம்பட்டி ஐ.டி.பார்க் அணி முதல் இடத்தையும்,கோவை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடத்தையிம் பிடித்தனர். மேலும் பெண்கள் பிரிவில் விமன் வாரியர் முதல் இடத்தையும்,விமன் விங்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.



Saturday, April 26, 2025

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளிகள், பணியாளர் சங்கங்கள் வரவேற்பு



26.04.2025 சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. கலைஞரின் வழித்தோன்றலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வை நீக்கி தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர். உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் என்றால் மிகை அல்ல. தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் பெயர்களிலும், இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சீரான கல்வி வழங்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர் கலைஞர்.

இந்த தேசத்தில் ஆளுமை மிக்க ஆழ்ந்த இலக்கிய புலமை வாய்ந்த அரசியல் வித்தகர் அரசியல் சாணக்கியர் என எல்லா திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் வாழ்ந்தார் என்றால் அது கலைஞர்தான். நாட்டிலேயே முதலிடத்திற்கு வந்திருக்கக்கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அத்தகைய தலைவர்களில் முக்கியமானவர் கலைஞர். அப்படி கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில், கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டி வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாக்காளர் பட்டியல் திருத்தம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்


26.04.2025
திருப்பூர்: கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பத்து பேருக்கு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது; 33 பேருக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் நடத்தப்படும் மருத்துவ முகாமிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் மாற்றுத்திறனாளி என குறியீடு செய்வதற்கான பதிவுகள் மேற்கொள்ளவேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் படிவம் சார்ந்த சேவைகள் மேற்கொண்டனர். ஆதார், மாற்றுத்திறனாளிகள் அடையாள அடை உள்பட ஆவணங்களை பெற்று, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டது. முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி என்பதற்கான குறியீடு செய்வதற்காக, மொத்தம் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது.


“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!



24.04.2025 
பார்வை மாற்றுத் திறனாளிகள் தினம் தினம் போராடிப் போராடிதான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஓர் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்பதெல்லாம் எட்டிப்பிடிக்க முடியாத கனவுதான். இத்தகையை சூழலில், ஒன்பதாம் வகுப்பில் தனது பார்வையை இழந்த மனு கார்க் (23) என்ற இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 23 வயதான மனு கார்க். தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துள்ளார். சமீபத்தில் முடிவுகள் வெளியான யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே , சமூக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இது குறித்து அவர் பகிர்ந்தவை: “அரசு ஊழியர்கள் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்பது பற்றிய கதைகளை நான் சிறு வயதிலேயே கேட்பேன். அது எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. சிறு வயதில் இருந்தே நாட்டு நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சம்பவங்களை அறிந்து கொள்வதில் நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது, ​​பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் தொடங்கின. வகுப்பறையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தாலும், கரும்பலகையை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிறகு, விழித்திரையில் சிதைவை ஏற்படுத்தும் ஒரு அரிய மரபணு கோளாறு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

காலப்போக்கில், இது முழுமையான பார்வை இழப்புக்கு வழிவகுத்தது. தொழில்நுட்பங்களை எனக்கு நிறைய வழிகளில் உதவியாக இருந்தது. தேர்வுக்கு தயாராவதில் சற்று சிரமங்கள் இருந்தாலும் கூட, நான் அதை சரியான முறையில் கையாண்டேன். ஆடியோ வடிவில் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னதான் நன்றாக படித்திருந்தாலும், தேர்வு எழுதுவது மிக முக்கியமான ஒரு விஷயம். நன்றாக எழுதும் ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலானது. அவர்கள் நாங்கள் கூறும் பதில்களைப் புரிந்துகொண்டு அவற்றை நாம் சொல்வது போல் சரியாக எழுத வேண்டும். முதலில் 2023-இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். ஆனால், தேர்ச்சி பெறமுடியவில்லை. எனது அம்மா மிகவும் உதவிகரமாக இருந்தார்.

எனது இலக்கில் மிக கவனமாக இருந்தேன். படிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினேன். ஒரு நாளுக்கான பாடத்திட்டத்தை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் இரவு வெகுநேரம் வரை படிப்பேன். மற்ற சமயங்களில் பாடல் கேட்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவேன்.

நான் ஐ.ஏ.எஸ்.-ல் சேர்ந்தால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் அனுதாபத்தையோ அல்லது ஹீரோக்களைப் போல நடத்தப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பு வழங்கப்பட்டாலே போதுமானது” என்றார்.


Seven tries, two kids, one dream: Nisa's IAS journey is peak perseverance


24.04.2025
Nisa clears UPSC in seventh attempt, joins IAS at 40 despite hearing disability

At an age when most aspirants have elther cleared the UPSC or hung up their boots, 40-year-old Nisa Unnirajan from Thiruvananthapuram scripted an extraordinary tale of grit. A mother of two young children, a full-time employee, and someone living with a hearing disability, Nisa cleared the civil services examination in her seventh attempt, securing a rank of 1,000 in the 2024 results.

Despite her rank, Nisa is eligible for the Indian Administrative Service (IAS) under the disabled category. Her story is not just one of success, but of silent strength, support from family, and steely determination.

The dream that bloomed late but bold

Nisa began her civil services journey only at the age of 35, far later than the usual -aspirants. As reported by TNN, she said, "I always had the ambition somewhere within me, but I only gave myself permission to pursue it seriously after I turned 35."

Balancing parenting duties with preparation wasn't easy. With daughters Nandana (11) and Thanvi (7) at home, the civil services syllabus wasn't her only responsibility. Supported by her husband Arun, a software engineer, and her parents-retired police clerk Unnirajan and Jayasree-she kept moving forward.

"I failed repeatedly, but I never saw those attempts as wasted," she was quoted by TNN. "Each one taught me something valuable. I kept refining my approach."

The training, the tribe, the tenacity

Nisa credited her training at a private coaching centre in Thiruvananthapuram as a pivotal part of her journey. She also drew tremendous motivation from Kottayam sub-collector Ranjith, who, like her, lives with a hearing impairment. As reported by TNN, she shared, "Knowing someone with a similar challenge had already walked this path made a huge difference."

To stay motivated, she turned to biographies, real-life success stories, and a dally dose of motivational videos. Her routine may have been unconventional, but it was deeply personal and effective. Her persistence paid off-not overnight, but over years of tireless effort.

Breaking barriers with grit and grace

Her achievement has inspired not just her family but a broader community of aspirants who may feel boxed in by age, disability, or circumstance. "It's never too late," she told TNN, her voice steady. "And no dream is ever too big."

Now poised to enter the IAS, Nisa stands as a living example of perseverance and purpose. As her story spreads, many others are likely to believe what she proved -that even the longest journeys begin with a single brave step, no matter when you take it.


வாய் பேச முடியாத பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பஸ் மறியல்


14.04.2025 
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெரு செபஸ்டியான் மகள் அற்புதமேரி 29. இவர் வாய் பேச முடியாதவர். கடந்த ஏப்.8ல் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். பின், கடந்த ஏப்.10ல் அற்புதமேரியை உத்தமபாளையம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் செபஸ்டியான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர், இந்த பெண்ணை அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து, பாலியல் கொடுமை செய்ததாகக்கூறி, அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் குற்றம் சாட்டினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு 8:00 மணியளவில் செபஸ்டியான் குடும்பத்தாரும், பொது மக்களும் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்ததாக கூறி உள்ளார். அதற்கான சி.சி.டி.வி., கேமரா வீடியோ பதிவுகளையும் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.வாய் பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண், அவரை கை காட்டி சைகையில் கூறியதாகவும், அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ் மறியல் இரவு 9:00 மணியாகியும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து நடந்தது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன்


தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்குவதற்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை குறைபாட்டுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, April 23, 2025

ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்



22.04.2025 அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குகின்றனர். அங்கு குறைந்தபட்ச மாற்றுத் திறனாளிக்கு 6 ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச மாற்றுத்திறனாளிக்கு 10 ஆயிரம் ரூபாயும் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்குகின்றனர். இதுபோன்று தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சென்னைக்கு வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு சுமார் 500க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

‘’மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 30, 40 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகின்றன. கூலியும் முழுவதுமாக கொடுக்காமல் 150, 100, 80 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாட்கள் வேலையும் கொடுத்து கூலியும் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இன்று காலை தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் வந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். அனுமதி வழங்கிய இடத்தில் சென்று போராடுங்கள், இங்கு போராடக்கூடாது என்று கூறி காவல்துறையினர் எங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஊக்கத் தொகையை உயர்த்தவேண்டும் என்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்.

21.04.2025 சிவகங்கை
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.

சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சோம. அசோக் பாரதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.கண்ணன் செயலறிக்கை வாசித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் மா. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளா் க. காளிதாஸ் ,துணைத்தலைவா் புகழேந்திகண்ணன், துணைச்செயலாளா் ராஜ்குமாா், துணைத்தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் நாகலட்சுமி, பானுமதி, இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சட்டப்பேரவை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணி மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு வசதியாக அனைத்து அலுவலகங்களிலும் சாய்வுதள பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தி.மாய மணிச்சங்கு வரவேற்றாா்.

திருப்பத்தூா்: இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட மசோதா நிறைவேற்றியதையொட்டி, சிவகங்கை மாவட்ட டாக்டா் அப்துல் கலாம் மாற்றுத் திறனாளி நலச் சங்கம், சிகரம் மாற்றுத்திறனாளி நலச் சங்கம், டிசம்பா் 3 மாற்றுத்திறனாளி நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆா்.கண்ணன், கனகராஜ், சின்னத்தம்பி, இளங்கோ, பாலா, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, அஞ்சலை, நாகராஜன் ஆகியோா் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனைச் சந்தித்து முதல்வருக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனா்.




மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் தனி பிரதிநிதித்துவம் - புதிய மசோதா எந்த அளவுக்கு பயன் தரும்?



21.04.2025 
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

'தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும்' என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீப காலமாக மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்பாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?


உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி பிரதிநிதித்துவம்

நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை, தமிழக சட்டப்பேரவையில் (ஏப்ரல் 16) அறிமுகம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

"இதை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத் திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமின்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறினார்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்றும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.


விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான வினாக்களுக்கு துணை முதலமைச்சர் பதில்



22.04.2025 
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான வினாக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் விவரம்;

“கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நான் பேசும்போது, நம்முடைய முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன்படி பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர், அவர்களுடைய கைகளால் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல இந்த ஆண்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நிச்சயமாக இந்த ஆண்டும் குறைந்தது 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் பெற்று தரப்படும். அதேபோல, விளையாட்டு வீரர்கள் 3 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் காவல் துறையில் பணியாற்றுகின்ற வாய்ப்பினை நமது அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதற்கான அரசாணை இந்த ஆண்டு வெளியிடப்பட்டு, இதுவரை சென்று ஆண்டில் கொடுத்த 104-ல், 11 வீரர்களுக்கு காவலர் பணி Police Constables பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது காவல் துறையில் 32 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) பணியிடங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விரைவில் இரண்டாம் நிலை காவலர் அதாவது Police Constables பொறுப்புக்கும் அந்த விண்ணப்பங்கள் கோரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். காவல் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு பணியாற்றுகின்ற வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளுடைய முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசும், முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். கடந்த வாரம்கூட, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளை ஊராட்சி அமைப்புகளில் நியமனம் செய்வதற்கான சட்டமுன்வடிவை இந்த அவையில் அறிமுகப்படுத்தினார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சுமார் 13 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வரவிருக்கின்றார்கள்.

இதற்காக மாற்றுத்திறனாளி சகோதரர்கள், சகோதரிகள் முதலமைச்சர் அவர்களையும், என்னையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அவர்கள் சொன்ன வாக்கியம், ‘இத்தனை நாட்களாக கேட்கும் இடத்திலிருந்த நாங்கள், முதன்முதலாக கொடுக்கும் இடத்திற்கு வரப்போகிறோம்’ என்ற நம்பிக்கையான வார்த்தைகளை இங்கே நான் பதிவு செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற துறைகளைப்போலவே, விளையாட்டுத் துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.

போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய தமிழ்நாடு Champions Foundation அறக்கட்டளைமூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகின்றோம். இதுவரை 198 Para players-களுக்கு மட்டும் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் அளவிற்கு Champions Foundation-லிருந்து அவர்களுடைய பயணச் செலவிற்கு, பயிற்சி செலவிற்காக மட்டுமே செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மற்ற வீரர்களுக்கு இணையாக உயரிய ஊக்கத்தொகை high cash incentive இதுவரைக்கும் 196 para players-களுக்கு நம்முடைய அரசு 27 கோடி ரூபாய் high cash incentive உயரிய ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறது என்றுக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த 3% இடஒதுக்கீட்டின்கீழ் மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அரசுத் துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்றாண்டு target 100 என்கிறபோது, 104 achieve செய்தோம். இந்தாண்டு 100. இதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நிச்சயமாக வேலை வாய்ப்பு அரசு பொதுத் துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளிலும் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


Monday, April 21, 2025

வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு

 

21.04.2025 திருச்சுழி அருகே வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தனுஷ்கோடி இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி உயிரிழந்த நிலையில் மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகனும் தஞ்சாவூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வரும் நிலையில் இங்கு தனிமையில் முற்றிலும் சிதலமடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். வீடு முழுவதும் சேதமானதால் தற்போது வீடின்றி ஊர் பொது கலையரங்கத்தில் தங்கி சமையல் செய்து வசித்து வந்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த முறை ஆய்விற்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சாலையில் செல்லும்போது அந்த வீட்டினை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து இவருக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட வேலைக்கான உத்தரவு ஆணையினை மாற்றுத்திறனாளி முதியோர் தனுஷ்கோடியிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார். அப்போது வேலைக்கான உத்தரவு நகலை வழங்கிய பிறகு முதியவரிடம் உங்கள் வீட்டை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும். உங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் வரை சென்று கோரிக்கை வைத்து வாங்கி வந்துள்ளேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இந்த வீடு கட்டி முடிக்கும் வரை அதிகாரிகள் களத்தில் இருந்து உடனுக்குடன் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சர் தங்கம்தென்னரசு உத்தரவிட்டார்.



காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

21.04.2025 சிவகங்கை: அரசு பொதுத்தேர்வுகளில் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைக்க வேண்டும், என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

உடல் இயக்க குறைபாடு உடையவர்களுக்கு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்ய இயலாது. அவர்களின் நிரந்தர ஊனத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் வழங்க வேண்டும்.

அறிவுசார் குறைபாடு, முடக்கு வாத பாதிப்பு, கை செயலிழப்பு, புற உலக சிந்தனை, உடல் இயக்க குறைபாடு, பன்முக குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் திடீர் விபத்துகளால் ஏற்படும் கை முறிவு போன்ற தற்காலிக பாதிப்பு உடையவர்களுக்கும் சொல்வதை எழுதுபவர் அதாவது அதே பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறவியிலேயே சில மாணவர்கள் காது கேட்காமல் வாய் பேசாமலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பயனில்லை.
காது கேளாதவருக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெரும்பாலானவருக்கு அவ்வாறு பொருத்தப்படும் கருவி செயலிழந்து விடுவதால் எப்பயனும் கிடைக்க பெறுவதில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதின் அபாயம் கருதி பெற்றோர்களும் தயக்கம் காட்டுவதால் நிரந்தர குறைபாடாக காது கேளாமை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் காது கேட்காத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிபெண்கள் வழங்கிட வேண்டும் என்றார்.




Friday, April 18, 2025

‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!



18.04.2025 

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது.

செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா.

தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார் அபிநயா. அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ’ஈசன்’, ‘7-ம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி, ஓடிடியிலும் கவனம் பெற்றுள்ள ‘பணி’ (Pani) படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்புத் திறனும் வெகுவாக பேசப்பட்டது.

இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான கார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும் ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.


Minor with speech and hearing impairment raped, assaulted in UP; accused arrested


18.04.2025
A 24-year-old man was arrested within 24 hours of allegedly raping an 11-year-old Dalit girl in Uttar Pradesh's Rampur district. The survivor, who is speech and hearing impaired, was reportedly lured into a forest by the accused—identified as Dan Singh, a resident of her own village —where the assault took place.

Rampur Police acted swiftly after the girl's mother filed a complaint at the police station. According to Superintendent of Police Vidya Sagar Mishra, three police teams were formed to trace the unidentified accused. "During the arrest attempt, the accused opened fire with intent to kill. In retaliatory firing by the police, he sustained injuries and was subsequently arrested," Mishra said.

Dan Singh, son of Harpal Singh, confessed during interrogation. Police said his involvement is corroborated by electronic evidence and CCTV footage, which showed him approaching and leading the minor away.

The survivor has been referred to Meerut Medical College for specialised treatment. Officials confirmed that injury marks were found on her body.

A case has been registered under Section 65(2) of the Bharatiya Nyaya Sanhita (BNS) and Sections 5m/6 of the Pocso Act.


UP horror! Deaf and mute minor Dalit girl raped in Rampur


According to the report, the minor girl was reportedly lured into a forest by the accused, who is also a resident of the same village and allegedly raped her.

17.04.2025
In a horrific incident, an 11-year-old speech-and-hearing-impaired Dalit girl was brutally raped in Uttar Pradesh's Rampur district, India Today quoted the police as saying adding, they have arrested a 24-year-old man – Dan Singh.

According to the report, the minor girl was reportedly lured into a forest by the accused, who is also a resident of the same village and allegedly raped her.

The minor girl was missing since Tuesday evening and her family members had been looking for her. She was found naked and injured in a field on Wednesday morning.

Following the girl’s mother filed a complaint at the police station, the Rampur Police acted swiftly. To arrest the accused the police constituted three teams. "During the arrest attempt, the accused opened fire with intent to kill. In retaliatory firing by the police, he sustained injuries and was subsequently arrested," Superintendent of Police Vidya Sagar Mishra said, as quoted by India Today.

During the interrogation, Dan Singh, son of Harpal Singh, confessed to the crime. Police mentioned Singh's involvement is corroborated by electronic evidence and CCTV footage, showing him approaching and leading the minor away.

Dr Anju Singh, who conducted the girl's medical examination, told The Times of India, "This is a clear case of rape by one or more persons as there were multiple injuries on her private parts. Her face had been struck with a blunt object, leaving it swollen. She was terrified and unable to explain anything. It is one of the most horrific sexual crimes I have seen."

Meanwhile, the victim has been referred to Meerut Medical College for specialised treatment.

The police registered a case on Singh under Section 65(2) of the Bharatiya Nyaya Sanhita (BNS) and Sections 5m/6 of the Pocso Act.


Deaf-And-Mute Dalit Girl, 11, Raped In UP Village: Cops


The girl, who was missing since Tuesday evening, was found lying unconscious in a field in the morning, they said, adding that she was naked and bleeding.

17.04.2025
Rampur:
An 11-year-old deaf-and-mute Dalit girl has allegedly been raped in a village in this Uttar Pradesh district, police said on Wednesday.

The girl, who was missing since Tuesday evening, was found lying unconscious in a field in the morning, they said, adding that she was naked and bleeding.

Her family members were subsequently informed, police said.

The girl hails from a village located within the Shahbad police station limits.

Additional Superintendent of Police (Rural) Jaipal Singh said the girl was rushed to a hospital, where her condition was stated to be stable.

An FIR has been registered on a complaint from the rape survivor, the officer said, adding that three teams have been formed by the superintendent of police to work out the case.


Wednesday, April 16, 2025

சைகையில் மாத்திரம் பேசும் மக்களை கொண்ட கிராமம் பற்றி தெரியுமா!



12.04.2025 
துருக்கியிலுள்ள (Turkey) ஒரு கிராமம் அறிவியலாளர்களை மிக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த கிராமத்தில் வாழ்பவர்களில் 50 சதவீதமானவர்களுக்கு காது கேட்காது என்பதுடன் அவர்களால் பேசவும் முடியாது.

துருக்கியிலுள்ள கோகோவா (Gokova) என்னும் கிராமத்தில் வாழும் மக்களுக்கே இவ்வாறான ஒரு புது வித பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த கிராமத்தில் வாழும் பெரும்பாலானோர் சைகை பாஷையை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது தான் காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மற்றும் சிலர் , இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதுதான் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.

ஒவ்வொரு முறை கிராமத்தில் குழந்தை பிறக்கும்போதும், அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அந்த கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என தெரிவித்துள்ளார்.


சடலத்துடன் கொலையாளிகளை பிடித்தும் திணறிய போலீஸ் - துப்பு துலக்க உதவிய சிறுவன்



15.04.2025
மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார்.

இந்த வழக்கு மும்பையில் உள்ள பைதுனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பைதுனி காவல்துறை, தாதர் ரயில்வே காவல்துறை மற்றும் மும்பை காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் விசாரணை நடத்தின.



என்ன நடந்தது?

சம்பவம் நடந்தது தாதர் ரயில் நிலையத்தில். அன்று 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஆகும்.

நேரம் இரவு 11:50 மணி இருக்கும். ரயில் நிலையத்தில் மக்கள் தங்களுக்கான ரயில்களைப் பிடிக்க அவசர அவசரமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

அது தாதர் ரயில் நிலையம் என்பதால், வழக்கம் போல் உள்ளூர் ரயில்களும், விரைவு ரயில்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

திங்கள்கிழமை இரவு தாதரில் இருந்து சாவந்த்வாடி செல்லும் துடாரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பயணிகள் 11வது நடைமேடையில் காத்திருந்தனர்.

துடாரி எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்ததும், பயணிகள் ரயிலில் ஏற விரைந்தனர்.

அந்த 11வது நடைமேடையில் ஐந்து, ஆறு ஆகிய பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், இரண்டு பேர் துடாரி எக்ஸ்பிரஸில் ஏறச் சென்றார்கள்.

அவர்கள் இருவரிடமும் சக்கரங்கள் கொண்ட ஒரு சூட்கேஸ் இருந்தது. அதனை ரயிலில் ஏற்ற அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். பெட்டியின் அதிக எடை காரணமாக இருவரும் தங்களது உடைமைகளை ரயிலில் ஏற்றுவதற்குள் சோர்ந்துவிட்டனர், வியர்வையில் அவர்களது உடைகள் நனைந்தன.

அந்த சமயத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் மாதவ் கேந்திரா நடைமேடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள், இருவரையும் தடுத்து நிறுத்தி பெட்டியை திறக்கச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தயக்கம் காட்டினார்கள். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் , பெட்டியின் மோசமான நிலையைப் பார்த்து, அதைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, திறந்து பார்த்த பிறகு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதில் இரத்த வெள்ளத்தில் ஒரு உடல் இருந்தது. அந்த உடலின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. உடனடியாக காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார், மற்றவர் பிடிபட்டார்.

காவல்துறையினர் அந்த நபருடன் பையையும் கைப்பற்றி உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர் பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர். கைது செய்யப்பட்ட நபர், காது கேளாதவர். இதன் காரணமாக, ஆரம்பத்தில் அவரிடமிருந்து எந்த தகவலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.

விசாரணையில் காவல்துறைக்கு உதவிய கௌரவ் சத்புதே பாராட்டப்பட்டார்.

சைகை மொழி அறிந்த ஒருவரை தேடிய காவல்துறை

இந்த வழக்கில் காவல்துறை அதிக ஈடுபாடு காட்டினாலும் கூட, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, நள்ளிரவில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மக்களின் சைகை மொழியை அறிந்த ஒருவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

ஆனால், நள்ளிரவு ஆகிவிட்டதே, இப்போது யார் வருவார்கள்? இந்த வழக்கின் மர்மத்தை தீர்ப்பது எப்படி? என்று கேள்விகள் எழுந்தன. சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி, பைதுனி காவல்துறையின் ஒரு குழு சென்றது.

அந்தக் குழு நள்ளிரவில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சோதனைச் சாவடி பகுதியை அடைந்தனர். அந்த நேரத்தில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே ரவுப் பணியில் இருந்தார்.

சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் தாதர் காவல்துறையின் வாகனத்தில் இருந்தவர்களிடம், "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர்.

ஒரு வழக்கு தொடர்பாக உதவி பெற, சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி 'சாதனா வித்யாலயா' என்னும் பள்ளிக்கு செல்வதாக தாதர் காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்போது, அங்கு இருந்த கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, "இந்த நேரத்தில் யாரும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், என் மகனும் அந்தப் பள்ளியில்தான் படித்தான், அவன் உங்களுக்கு உதவ வாய்ப்பு உள்ளதா என பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

பைதோனி காவல்துறையினர், சத்புடேவிடம் உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அதிகாலை 2 மணிக்கு, மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சத்புடே தனது வீட்டிற்குச் சென்றார். சிறிதும் தாமதிக்காமல், தனது மகன் கௌரவ் சத்புடேவை பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

கௌரவ் மூலம் கிடைத்த முக்கியமான தகவல்கள்

அதிகாலை 2 மணிக்கு குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொள்ள காவல்துறை குழு கௌரவிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்தது. கௌரவ் சைகை மொழியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

கைதான நபர் தனது பெயர் ஜெய் சாவ்தா என கூறினார். இதன் பின்னர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தது, ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, விசாரணைக்குத் தேவையான முக்கியமான தகவல்கள் கிடைத்தன. இது குற்றப் பின்னணி, இணை குற்றவாளிகள் மற்றும் குற்றத்தின் நோக்கம் பற்றிய விரிவான தகவல்களை காவல்துறைக்கு வழங்கியது.

பிபிசி மராத்தியிடம் பேசிய கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, "நானும் என்னுடைய மகனும், இந்திய குடிமக்களாக எங்களது கடமையை நிறைவேற்றினோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கௌரவ், சாதனா வித்யாலயாவில் 10ஆம் வகுப்பு வரை படித்தார், மேலும் மஸ்கான் டாக் லிமிடெட்டில் 'பைப் ஃபிட்டர்' படிப்பை முடித்தார். அவர் தற்போது வீட்டில் இருக்கிறார். என் காவல்துறை சகாக்களுக்கு இந்த வழக்கில் உதவி தேவைப்பட்டதும், என் மகன் உடனடியாக உதவினான். கௌரவின் முயற்சியால், இந்த வழக்கு பற்றிய முழு தகவலையும் காவல்துறையினரால் பெற முடிந்தது. கௌரவ் மாற்றுத்திறன் கொண்ட ஒருவராக இருந்தாலும், எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வார். அவர் புத்திசாலி." என்றார்.

விசாரணையில் தெரியவந்தது என்ன?

விசாரணையின் போது, தப்பித்து ஓடிய குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் ஷிவ்ஜித் சிங் என்பது தெரிய வந்தது. அவர் உல்ஹாஸ் நகரில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய தகவல் அளிப்பவர்களின் உதவி மூலம் இரண்டாவது குற்றவாளியான ஷிவ்ஜித் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டவர், அர்ஷத் சாதிக் அலி ஷேக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டது. அர்ஷத், சாண்டாக்ரூஸின் கலினா பகுதியில் வசித்துவந்தவர். அர்ஷத்தும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின் போது, ​​ஷிவ்ஜித் சிங் மற்றும் ஜெய் சாவ்தா ஆகியோர் அர்ஷத் சாதிக் அலி ஷேக்கைக் கொன்றதாக ஒப்புக்கொண்டனர்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடலை கொங்கனுக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்த முடிவு செய்தனர். அர்ஷத்தின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து, துடாரி எக்ஸ்பிரஸ் மூலம் கொங்கனுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்போதுதான், ​​காவல்துறையினர் சந்தேகமடைந்து இருவரையும் அழைத்துச் சென்றதால், முழு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின் போது ஒப்புக்கொண்டனர்.

கொலையின் மர்மம் அங்கு முடிவடையவில்லை, கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடேவின் மகன் கௌரவ், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பேசிய பிறகு மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறியிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரு வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்தவர்கள். இதில் உலகின் பல நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.

அர்ஷத்தைக் கொல்ல கொலையாளிகள் குழுவில் உள்ள மூன்று மாற்றுத்திறனாளிகளின் உதவியைப் பெற்றனர். கொலை நடந்த நேரத்தில், மூன்று மாற்றுத்திறனாளிகளும் வீடியோ அழைப்புகளில் பேசிக்கொண்டனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளியும் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கௌரவிடம் தெரிவித்தனர்.

இந்த கொலை ஏன் செய்யப்பட்டது?

அர்ஷத் ஷேக், ருக்சனா என்ற பெண்ணை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ருக்சனாவும் வாய் பேச முடியாதவர்.

அர்ஷத் சின்ன சின்ன வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாள் பைதோனியில் ஒரு வசதியான வீட்டில் வசித்து வந்த ஜெய் சாவ்தா மற்றும் ஷிவ்ஜீத் ஆகியோருடன் அர்ஷத் நட்பு கொண்டார்.

பின்னர், ஜெய் மற்றும் அர்ஷத்தின் நட்பு மேலும் வளர்ந்தது. அது வீட்டிற்கு வந்து போகும் அளவுக்கு வலுப்பட்டது. இதில் அர்ஷத்தின் மனைவி ருக்சனாவுக்கு ஜெய் சாவ்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது.

பின்னர் இருவருக்கும் இடையே ஒரு தடையாக இருந்த அர்ஷத்தை கொல்ல ஜெய் ஒரு சதித்திட்டம் தீட்டினார்.

அவரை கொல்ல நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.

இதற்காக, ஜெய் தனது நண்பர் ஷிவ்ஜித்தின் உதவியைப் பெற்றார். அர்ஷத்தை பைதோனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்ததாகவும், அவருக்கு மது அருந்த கொடுத்ததாகவும், அவர் அதிகமாக போதையில் இருந்தபோது சுத்தியலால் குத்திக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையினரால் அர்ஷத்தின் மனைவி உள்பட மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அர்ஷத்தின் மனைவியைப் பற்றிய ஆதாரங்களைக் கண்டறிந்த பின்னர் அவரையும் பைதோனி போலீசார் கைது செய்தனர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதால், அவரைக் காவலில் எடுக்க காவல்துறையினர் விரும்பினர். இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காவல்துறையினர் முயற்சித்தனர்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை நான்கு மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இருப்பினும், பல நாட்கள் விசாரணைக்குப் பிறகு, பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை காவல்துறையினர் மீட்டனர்.

பலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் உறுதியான ஆதாரங்களுடன், மேலும் விசாரணை நடத்தப்பட்டு, ஜெய் பிரவீன் சாவ்தா, ஷிவ்ஜித் சிங் மற்றும் ருக்சானா ஷேக் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

இந்த கொலை வழக்கைத் தீர்க்க அனைத்து காவல்துறை குழுக்களும் கடுமையாக உழைத்தன.

கிட்வாய் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ் சத்புடே மற்றும் அவரது மகன் தங்கள் கடமைகளை உண்மையாகச் செய்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டனர். முக்கியமாக, கௌரவின் உதவியுடன், தாதர் ரயில் நிலையத்தில் நடந்த கொலை வழக்கை ஆரம்பத்திலிருந்தே தீர்க்க முடிந்தது. இது சம்பந்தமாக, பல சைகை மொழி நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டது.

This Collector Finds Happiness In Squeaks Of Children With Hearing Impairment Who Start Hearing After Surgery




15.04.2025
Dr Thiyagarajan SM, IAS, who is DM of Gaya in Bihar, has done screening of over four lakh children in his district to detect hearing impairment. He has bestowed hearing ability on 72 children so far and hopes to make the district free of hearing impairment in the next six months. The scheme is now being replicated in all districts of the state.

He is a doctor. But not an ENT (Ear, Nose, Throat) specialist. He rather switched to the Indian Administrative Service (IAS) in 2011. Yet, he has given 72 children with hearing impairment the power to hear again. Not only that, but in his earlier stints in Darbhanga and Nalanda, his work has been hailed widely. He was honoured with the Prime Minister’s Award for Excellence in Administration for ensuring electrification of over 7 lakh houses during his stint in Nalanda and energising 100 per cent of households in the district in record time in 2017. In Darbhanga, he again created a record by administering 1.1 lakh doses of vaccines in a single day. We spoke to him about all these issues.

It is interesting to know how he figures out the problem and promptly goes for the solution, that too in backward and aspirational districts like Gaya where medical services were rather poor. He not only jacked them up but also enlisted the support of a private hospital in Kanpur (UP) to achieve his goals. He tapped into various government schemes to fund the expensive treatment of these children – to the tune of Rs six lakh per child.

Being a trained doctor himself, Dr Thiyagarajan was aware that the hearing impairment of children below five years of age can be cured completely. Hence, he embarked upon a screening drive in the district in 2022. In the next two years, he got almost every child in that age group screened for deafness. In the next six months, he hopes to get rid of the district of hearing disabled children. “There is no better joy than hearing the ecstatic squeaks of children who are able to hear for the first time in their lives,” he says.

He has just put in 13 years of service and has a whole lot of administrative career ahead of him. We can only hope that he continues the good job and benefits the Bihar state and the nation too.


மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: சட்டமுன்வடிவு - நாளை தாக்கல்



15.04.2025  
சென்னை, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை, நாளை (புதன்கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். முன்னதாக இதுகுறித்து பேசிய இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.



மாற்றுத்திறனாளிகள் 2,50,987 பேருக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்



15.04.2025 
சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 55ன் கீழ் சங்ககிரி சுந்தரராஜன் (அதிமுக) கவனஈர்ப்பு கொண்டு வந்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்போது ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டாலும், 65 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் வாகனம் வழங்குவதற்கு பதில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அரசு வழங்க வேண்டும்‘‘ என்றார்.

இதற்கு பதில் அளித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் நோயினால் பாதிக்கப்பட்டோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் அடுத்த மாதமே பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 2,50,987 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.