
12.12.2025
அரியலூர் எழிலரசி வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் தடைகளை மீறி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பெற்றார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் சைகை மொழியில் வாழ்த்தினார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்கள் வெற்றிக் கதையைச் சொன்னார்கள்.
நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவி மற்றும் பேச்சு திறன் மாற்றுத்திறனாளி எழிலரசி தன் வாழ்வில் போராடி வென்றதையும், அதற்கு வெற்றி நிச்சயம் திட்டம் உறுதுணையாக இருந்ததையும் பற்றிச் சொன்னார்.
மாற்றுத்திறனாளியான எழிலரசி, தன் அப்பாவும், சகோதரரும் கூட செவி மற்றும் பேச்சு திறன் மாற்றுத்திறனாளிகள். அதுமட்டுமல்ல, அப்பாவுடன் பிறந்த 8 பேரும் அவரைப் போலவே மாற்றுத்திறனாளிகள். இதன் காரணமாக அப்பாவால் வெளியே வேலை செய்ய முடியாமல், விவசாயம் செய்துவருகிறார்.
.jpg)
No comments:
Post a Comment