
02.12.2025
சேலம்: நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். பின்னர், திடீரென அவர்கள் முன்பகுதியில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் நகர போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் அளித்த கோரிக்கை மனு:
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது உள்ளாட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் இந்த மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களை தேர்வுசெய்ய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழுவினர் நியமன உறுப்பினர்களை முறையாக தேர்வு செய்யவில்லை.
எனவே, இந்த நியமனத்தை தமிழகம் முழுவதும் ரத்துசெய்து முறையாக தேர்வுசெய்து, தகுதிவாய்ந்த மாற்றத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்தக் கோரிக்கை மனுவை மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டதையடுத்து, தர்னாவில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

No comments:
Post a Comment