03.12.2025
சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி வரும் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிக் கவுரவித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகள் தம்மை விடப் பலசாலியாக உள்ளதாகவும், அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தம்மை போல் சக மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி லோக் பவன் என்று அறிவித்த முதல் நிகழ்ச்சியாக இது இருப்பதாகவும் ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment