12.12.2025
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கஷ்டப்பட்டுப் படித்து இப்போது தனது பெற்றோரைக் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அதைக் கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் கலங்கிய நிலையில், அடுத்து நடந்த சம்பவம் அரங்கத்தையே அதிர வைத்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அத்தோடு சேர்த்து வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் அந்தத் திட்டம் குறித்துப் பேசினார்.

மாற்றுத்திறனாளி பெண்
அப்போது காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சைகை மொழியில் பேசவே அதை அருகே இருந்த மற்றொரு பெண், மொழிபெயர்ப்பு செய்தார். அந்தப் பெண் பேசுகையில், "நான் அரியலூர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். எனது அப்பா மற்றும் தந்தை வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான். எனது குடும்பத்தில் மிகவும் கஷ்டமான ஒரு நிலை தான். அப்பா விவசாயம் செய்கிறார். அம்மா வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். ஒரு ஏழ்மையான நிலையில் தான் இருக்கிறோம். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்
எனது தந்தைக்கு வெளியுலகம் தெரியாது. இதனால் வேறு இடங்களுக்கும் வேலைக்குப் போக முடியவில்லை. அவருடன் பிறந்த எல்லாரும் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான்! இந்தக் கஷ்டத்தில் இருந்து உடைத்து வெளியே வர வேண்டும் என யோசித்தேன். அப்போது எனது உறவினர்களே பலரும் +2 வரை படித்தது போதும் விவசாயம் பாருங்கள் என்றே சொன்னார்கள்.
5 ஆண்டுகள் வேலை கிடைக்கல
அம்மா தான் தொடர்ந்து படிக்கச் சொன்னார். இதனால் சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பையும் கூட கஷ்டப்பட்டு தான் முடித்தேன். அப்போதும் கூட ஈஸியாக வேலை கிடைக்கவில்லை.. 5 ஆண்டுகள் வேலை தேடி அலைந்தேன். நீ மாற்றுத்திறனாளி உன்னால் சமாளிக்க முடியாது.. சென்னையில் வாழ முடியாது எனச் சொல்லி பலரும் கஷ்டப்படுத்தினார்கள். அப்போது முதல்வர் கொடுக்கும் உதவித்தொகை தான் பெரியளவில் கை கொடுத்தது. மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது.
அந்தச் சூழலை எப்படியாவது உடைக்க வேண்டும் என்றே நினைத்தேன். எல்லாராலும் முடியும்போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன். அப்பாவுக்கு இருக்கும் சூழல் நமக்கும் வந்துவிடக்கூடாது என நினைத்தேன். உன்னால் முடியாது என்றே பலரும் தொடர்ந்து சொன்னார்கள்.
கை கொடுத்த முதல்வரின் திட்டம்
அப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. நம்மிடம் திறமை இருக்கிறது.. எல்லாராலும் முடியும் போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன்.. கல்லூரி படித்த பிறகும் 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தது. அப்போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.. அம்மா தான் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார். தீவிர முயற்சிக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே மனதை விட்டுவிட்டேன்.. நம்மால் முடியாது தான் போல என யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கேயே எனக்குப் பயிற்சி கொடுத்தனர். நிரந்தரமாக வேலையும் கிடைத்தது.
அப்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. குடும்பச் சூழலை மாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா, அப்பாவை நானே எனது வருமானத்தில் பார்த்துக் கொண்டேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தபோது தான் இந்தத் திட்டம் எனக்குப் பெரியளவில் கை கொடுத்தது. ஈஸியாக வேலை கிடைத்தது. அத்தனை பேர் முடியாது என்ற போதிலும், என்னால் சாதிக்க முடிந்தது. இதற்காக நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அரங்கமே அதிர்ந்தது
அவரது இந்தப் பேச்சு பலரையும் கலங்க வைத்தது. இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் தங்கள் கைகளை உயர்த்தி, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கைகளை தட்டும் வகையில் சைகை செய்தனர். ஒரு துளி சத்தம் வரவில்லை என்றாலும் அரங்கமே அதிரும் வகையில் இந்தச் சம்பவம் இருந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
.png)

No comments:
Post a Comment