FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, ‘உரிமை’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்



03.12.2025
மாற்றுத் திறனாளிகள் இனி அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவு செய்யப் போகும் மக்கள் பிரதிநிதிகள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், ''மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் முழுமையாக ‘சார்ஜ்’ எடுத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாம் செய்து கொண்டு வருகிறோம். அதன் உயிர் அடையாளமாக நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளில், புதிய மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரத்து 631 மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளை வரவேற்கிறேன்.

இப்போது நகர்ப்புறத்தில், 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமித்திருக்கிறோம். அடுத்து, மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அமையும்போது இன்னும் 9 ஆயிரத்திற்கும் மேல் அதிகாரம் பெற இருக்கிறீர்கள்.

டிசம்பர் 3-ஆம் நாளை, உலக மாற்றுத் திறனாளிகள் நாளாக அறிவித்து கொண்டாடும் ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும். சாதி - மதம் - இனம் - மொழி – பாலினம் என்று ஏராளமான வேறுபாடுகளும், பாகுபாடுகளும், தீண்டாமைகளும், நிறைந்திருந்த இந்தியச் சமூகத்தில், இதையெல்லாம் களையப்பட வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சமூகத் தீண்டாமையை கைவிட்டு முற்போக்குப் பாதையில் நடைபோட ஆரம்பித்து விட்டார்கள். இதுதான், இந்திய நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டை வேறுபடுத்தி காட்டுகிறது. கடந்த காலங்களில், மாற்றுத்திறனாளிகளை எப்படியெல்லாம் புறக்கணித்தார்கள். எப்படிப்பட்ட “இன்-சென்சிட்டிவ்”-ஆன சொற்களைப் பயன்படுத்தினார்கள். வலி மிகுந்த வரலாற்றை நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால், இது புது வரலாற்றைப் படைக்கக்கூடிய நேரம் வந்தாகிவிட்டது.

புது வரலாற்றை அரசு மட்டுமல்ல, அரசுடன் சேர்ந்து நீங்களும் படைக்கப் போகிறீர்கள். கருணாநிதி “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை உண்மையான உள்ளன்போடு அறிமுகப்படுத்தினார். அவர் ஆட்சிக் காலத்தில் தான், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தலைமைச் செயலக அளவிலும், துறைத் தலைமை அளவிலும், இந்தியாவிலேயே தனித்துறையைக் கொண்ட தனிச் சிறப்பை தமிழ்நாடு பெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி செயல்பட்டு வரக் கூடிய சில திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 4 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்.

இதேபோல், தனியார் துறைகளிலும் பணியமர்த்த, மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திக் கொண்டே வருகிறோம். பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 பயனாளிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், மறுவாழ்வு இல்லங்கள் சீரமைப்புக்கு 2 கோடி ரூபாய் நிதி தரப்பட்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்கங்களில் தடையற்ற சூழல் அமைய 37,20,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 சிறப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி, 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியோடு கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள், முதற்கட்டமாக - சென்னையில் குரூப்–2, 2A தேர்வு எழுத உள்ளவர்களில் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த, 49 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.


இந்த வரிசையில் தான் மாற்றுத் திறனாளிகளின் அரசியல், சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் முக்கியமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தோம். உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில், உங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கிறோம்.

ஊராட்சி அமைப்புகள் - ஒன்றிய அமைப்புகள் - மாவட்ட அமைப்புகளில் இன்றைக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதன் மூலமாக, சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இனிமேல், நீங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவுசெய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள். மனுக்களை அளிக்க போகிறவர்கள் இல்லை நீங்கள்; மனுக்களை பெற்று தீர்வுகாணப் போகின்றவர்கள் நீங்கள்.

இனிமேல் நீங்கள் ஆற்றப் போகும் பணிகள் முக்கியமானதாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குரலையும் - நீங்கள் எதிரொலிக்க வேண்டும். அவர்களுக்கான தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளில் எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும். இப்போதும் சில பிற்போக்குவாதிகள், “இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகி என்ன செய்யப் போகிறார்கள்” என்று நினைக்கலாம்! அவர்களின் தரம் அவ்வளவு தான்! அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த நொடியிலும் நீங்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது! சோர்வடையக் கூடாது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நீங்கள் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்! அவர் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக் கொண்டு, இறுதி வரை சமூகத்திற்காக உழைத்தார். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப் போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.



No comments:

Post a Comment