20.11.2016
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி, கணினி மூலம் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தையல் பயிற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரம் கையாளுதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் பேசுகையில், "சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காகவே பல்வேறு புதிய பயிற்சி வகுப்புகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பி.சி.ஏ. பட்டதாரி படிப்பு நமது பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கியுள்ளது" என்றார். விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகள் மைய தலைவர் (பொறுப்பு) பிரபாவதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment