13.09.2018
திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், டாக்டர். விஜய் மாதவன், மாணவியருக்கு பயிற்சி அளித்தார். அவர் பேசியதாவது: பரதநாட்டியம் என்பது காலங்காலமாக வாய்மொழியாக கற்றுக் கொடுக்கப்பட்ட கலை. இதனை ஏட்டில் எழுதி, ஒரு பாட புத்தகம் போல் வடிவமைக்கும் முயற்சியே 'நாட்டியோ கிராஃபி'. பரதநாட்டிய அசைவுகளை எல்லாம் எழுத்து மூலமாக சுருக்கமாக கற்றுக்கொள்ள உதவும் ஒரு நுட்பம். மாணவியர் பாடங்களை நினைவு கூற உறுதுணையாக இருக்கும். இதைக்கற்று கொள்ள, வயது வரம்பு தேவையில்லை. மாணவர்கள் அடவுகள் ஏற்கனவே கற்றவராக இருத்தல் அவசியம். காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் பேசினார். சாய் கிருஷ்ணா நுண் கலைக்கூட இயக்குனர் சந்தியா சங்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment