26.07.2017, ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான இரண்டு மாத இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 10:00 மணிக்கு, செங்கோடம்பள்ளம், திண்டலில் உள்ள குருசாமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. எம்.எஸ்., ஆபீஸ், இன்டெர்நெட், டைப் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆளுமை மேம்பாடு, சில்லறை வர்த்தகம் குறித்து இலவச பயிற்சி வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்கள், 18 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர், பார்வை குறைபாடு உடையோர் பங்கேற்கலாம். கல்வி தகுதி சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல், நான்கு போட்டோ கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பித்து தேர்வு பெறுவோருக்கு, 'யூத் பார் ஜாப், 65/111 பிக் பஜார் தெரு, கோவை - 641 001' என்ற விலாசத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது தங்குமிடம், உணவு இலவசம். இதை கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment