14.12.2018
திருவள்ளூர்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் ஈடுபடும் வகையில், நடைபெறும் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி வகுப்புகளில், மாற்றுத்திறனாளிகள் சேர விண்ணப்பிக்கும்படி, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.ஒரு மாத காலம்இப்பயிற்சி மூலம் சினிமா, தொலைக்காட்சி, போட்டோ ஸ்டூடியோ, பத்திரிகை மற்றும் செய்தி தாள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.பயிற்சியின் முடிவில், சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.'மல்டி மீடியா' மற்றும் 'ஆவிட், எப்.சி.பி.,' படத்தொகுப்பு, ஸ்டில் போட்டோகிராபி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.ஒரு மாதம் கால பயிற்சி வகுப்பில், 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து பயன்பெறலாம்.எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த கை, கால் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் தகுதியானவர்கள்.விருப்பமுள்ளோர், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை எடுத்து கொள்ளவும்.விண்ணப்பிக்கலாம்அவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு, இன்று முதல், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2766 2985 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment