மதுரை, 05 June 2016
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 16 வயதில் இருந்து 40 வயதுக்கு உள்பட்ட கை-கால் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி, புகைப்படப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாக ஒரு மாதம் இப் பயிற்சி அளிக்கப்படும்.
இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் உள்ள, தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் ரூ.1000 (ஒரு மாதத்துக்கு) உதவித் தொகையாக வழங்கப்படும்.
தகுதியான நபர்கள் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
பயிற்சியில் சேர ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment