FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 30, 2013

நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
“வெண்மணி இல்லம், K.அனந்தநம்பியார் நகர்,
கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-2.



நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 08.01.2014 புதன் கிழமை காலை 10.00 மணி
இடம்: BSNL  அலுவலகம், கண்டோண்மெண்ட், திருச்சி-1

அன்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்.

காதுகேளாத வாய்பேசமுடியாதவர்கள் தகவல் பரிமாற்றம் – அவர்களின் பேசும் மொழியே SMS தான். SMS மூலம் தான் பல்வேறு துறைகள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் காதுகேளாதவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். Black out Days எனப்படும் நாட்களில் SMS கட்டணங்கள் சலுகை இல்லாமல் எல்லோருக்கும் ரூ.1/-என ஆக்குவது இவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சமூக செயல்பாடு சுருங்கிவிடுகிறது. வேறு மாற்று இல்லாத காதுகேளாதோரின் இந்த பாதிப்பை உணர்ந்து UNCRPD எனப்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. இந்த விதிகளின்படி நமக்குரிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை உரிமைகளின் அடிப்படையில் இலவசமாக அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயமாகும்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அதன் தேசிய சங்கமான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
 

மத்திய அரசே!
  1. பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்தும்.
  2. SMS க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோர்க்கு வழங்குமாறும்.
  3. 3G வீடியோ சாட் இலவசமாக வழங்குமாறும்.
  4. மத்திய, மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு கண்டிடு என்றும்.
  5. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களுக்கு SMS அனுப்புவதில் சலுகை வழங்குக.
  6. SMS அனுப்பும்போது கால தாமதமின்றி உடனடியாக SMS கிடைக்கும்படி செய்யவேண்டும்.
  7. INTERNET க்கு சிறப்பு தள்ளுபடி சலுகையில் காதுகேளாதோர்க்கு வழங்கு.
என கோருகிறோம்.
தலைமை: R.ரவி (மாவட்ட தலைவர்) TARATDAC
சிறப்புரை: V.V.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) TARATDAC
N.ரமேஷ்பாபு (தலைவர்), M.சிவகுமார் (செயலாளர்), C.புஷ்பநாதன்(பொருளாளர்)
(திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்- TDWAD)

சரவணன் – G.நெடுஞ்செழியன் – ரமேஷ் – அப்துல்சலாம் – கலியபெருமாள் – S.ஞானசேகர் – S.கோவிந்தராஜன் – ஜெயராமன் – சித்ரா மற்றும் பலர்.
இவண்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மற்றும்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் (TDWAD)
CELL: 9443179508,   SMS: 8754896891, 7373383825, 9489559215

மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை

கோவை, 26 December 2013 .

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை எஸ்.என்.ஆர். கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் யூடீஸ் போரம் அமைப்பின் முதன்மை அறங்காவலர் எஸ்.சூர்ய நாகப்பன் பேசுகையில், உடல் ஊனமுற்றோரின் நலனுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வகையில் பங்களிக்க இயலும் என்பது குறித்து விளக்கினார். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Thanks to

மாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்


திருநெல்வேலி, 27 December 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:

மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks to

Saturday, December 28, 2013

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குவதில் தாமதம்

விருதுநகர் ,28 December 2013,
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நடக்க முடியாதவர்கள், கை கால் செயலிழந்தவர்கள், பணி செய்ய முடியாதவர்கள், தசை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதித்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், கடும் ஊனமுற்றோர் 100 பேர், மனவளர்ச்சி குன்றியோர் 400 பேர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 70 பேர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் என மொத்தம் 4630 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகையை வைத்து பெற்றோர் அல்லது உறவினர்கள் பராமரிப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதங்கள் வரையில் குறிப்பிட்ட நாளில் வழங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக உரிய நாளில் தொகை வழங்கப்படவில்லையாம்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு வரையில் ஒரு ஆண்டுக்கான தொகையை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வங்கி கிளைகளுக்கு பணம் விடுவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழாண்டு முதல் அந்தந்த மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் சரிபார்த்து கருவூலத்திற்கு பட்டியல் அனுப்பி, அங்கிருந்து பணத்தை பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரையில் பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால் தாமதம் ஆனாது.

தற்போது, பொறுப்பு அதிகாரி சரி பார்த்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.

தொழுநோயாளிகளுக்கான உதவித் தொகை அரசிடம் இருந்து வரவில்லையெனவும் தெரிவித்தார்.

Thanks to

மாற்றுதிறனாளி புதிய சட்டத்தை உடன் நிறைவேற்ற கோரி டிச 31 நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - சென்னையிலும் நடக்கிறது - வாரீர்

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு
டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுவதும் போராட்டம்


(இடமிருந்து வலமாக) மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா, ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான குழுவின் செயலாளர்  ஷ்யாமளா/ ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி/ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார். அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.

புதுதில்லி, டிச.27-ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டமுன்வடிவை பிப்ரவரியில் கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் முன்பும் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட ஊனமுற்றோர்களுக்கான அமைப்புகள் தீர்மானித்துள்ளன.இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி ஆகியோர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெள்ளியன்று மதியம் தில்லி, பெண்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அவர்கள் கூறியதாவது:ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான கன்வென்ஷன் அளித்துள்ள விதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ஊனமுற்றோருக்கு உரிமைகள் வழங்கும் மிக முக்கியமான இந்தச் சட்டமுன்வடிவிற்கு நான்கு ஆண்டுகள் கழித்து டிசம்பர் 13 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. ஆயினும் என்ன காரணத்தாலோ குளிர்காலக் கூட்டத்தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றியவுடனேயே காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஊனமுற்றோருக்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படவே இல்லை. எனவே 2014 பொதுத்தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் குறுகிய காலமே நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இச்சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்று அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருவேளை கால அவகாசம் இல்லையெனில், விவாதமின்றியாவது இது நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று கோருகிறோம். இதனை வலியுறுத்தி, வரவிருக்கும் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தின் முன்பும், மற்றும் பல்வேறு மாநிலத் தலைநகர்களின்முன்பும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளோம். அரசு செவிசாய்த்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்ட முன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் மேலும் வலுவாக எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மட்டும்தான் நாளை சனிக்கிழமையன்று மதியம் 12 மணிக்கு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்திருக்கிறார். அவரை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தமிழகத்தில் சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தர்மாபுரம் பகுதியில் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் தெரிவித்துள்ளார்.
Click here for
மாற்றுதிறனாளி புதிய சட்டத்தை உடன் நிறைவேற்ற கோரி டிச 31  நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்