FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, December 12, 2013

மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் முறைகேடு விவகாரம் – பகிரங்க மன்னிப்புக் கேட்டார் ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் !!

December 11, 2013 - கனடா
மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் இதுவரையிலும் ஒன்ரோறியோ அரசு எடுக்காததும், பல விடயங்களில் அவர்கள் புறந்தள்ளபப்ட்டதும் ஒன்ரோறியோ மாகணத்திற்கும் அரசுக்கும் பெரும் பின்னடைவு என்பது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய விடயம் என்பதால் ஒட்டு மொத்தமாக அனைவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வெய்ன் நேற்று அறிவித்தார்.


ஒன்ரோறியோவின் Orillia பகுதியில் உள்ள Huronia பிராந்திய மையத்தின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாணத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஒரு நீதிபதி, 35 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையடுத்து முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

1945ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இந்த நெரிசல் மிகுந்த மையத்தில், தினசரி அவமானம் மற்றும் துஷ்பிரயோகத்தைச் சந்தித்த மக்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த அல்லது பணமே பெறாமல் இந்த மையத்தின் வெளிப்புறங்களில் வேலை செய்ததாகவும், தேவையில்லாமல் பேசினால் ஆடைகள் இல்லாமல் அந்த மையத்தை சுற்றி வர வேண்டியது போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையின் போது சிலர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment