16.12.2013, கடலூர்,
மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் என்றார் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா.
தமிழ்நாடு பார்வை - மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடலூர் பார்வையற்றோர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடலூர், விழுப்புரம் கிளை மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கடலூர் கிளை துணைத் தலைவர் பாரதிராஜா வரவேற்றார். கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் மல்லிகா, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், விழுப்புரம் ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாபு செல்லத்துரை, ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் பாஸ்டினா அந்தோணி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா பேசியதாவது: மாணவர்களை ஊக்குவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளைத் தான் எடுத்துக் கூறுவோம். மாற்றுத்திறனாளிகள் இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தனி சட்டம் இயற்றி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் என்றார்.
10, 12-ம் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Thanks to

No comments:
Post a Comment