FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, December 27, 2013

ஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

உடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் கல்வித்துறையில் பணியாற்றும் வி.ஜனாகிராமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுப்பணி
பள்ளிக் கல்வித்துறையில் 2003-ம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தேன். இதன்பின்னர், எனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதால், மாற்றுப்பணியாக டெலிபோன் ஆப்ரேட்டர் பணி வழங்கப்பட்டது. இதற்கிடையில், உதவியாளர் பதவி உயர்வுக்கு, இளநிலை உதவியாளர் பெயர் பணி மூப்பு பட்டியலை அதிகாரிகள் தயாரித்தனர்.

இந்த பட்டியலில் என் பெயரை சேர்க்கும்படி 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கேட்க முடியாது
இந்த மனுவுக்கு, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மனுதாரர் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து டெலிபோன் ஆப்ரேட்டர் என்ற மாற்றுப்பணி பெற்றுள்ளார். தமிழக அரசு 23-2-2009 அன்று பிறப்பித்த அரசாணையின்படி, அவர் டெலிபோன் ஆப்ரேட்டர் பதவியில் இருந்துதான் பதவி உயர்வு பெறமுடியும். ஏற்கனவே வகித்த பதவியில் இருந்து பதவி உயர்வு கேட்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசின் கடமை
இந்த வழக்கில் உதவியாளர் பதவி உயர்வு பெற மனுதாரருக்கு தகுதி உள்ளதா, இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோன்ற கோரிக்கையுடன் 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டின், முழு டிவிஷன் பெஞ்ச், பணியில் இருக்கும்போது உடல் ஊனமுற்று, மாற்றுப்பணி பெற்றவருக்கு பதவி உயர்வு மற்றும் அதற்கு ஏற்ற சம்பள உயர்வு பெற தகுதி உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

மனுதாரருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால், அவருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணி வழங்குவது அரசின் கடமையாகும்.

நிபந்தனை ரத்து
அதற்காக, அவர் பதவி உயர்வு கோர முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

மேலும், மாற்றுப்பணி வழங்கும்போது, அந்த மாற்றுப்பணியில் பணி மூப்பு பட்டியலில் கடைசியாக பெயர் சேர்க்கப்பட்டு, அந்த பணியில் இருந்துதான் பதவி உயர்வு பெறமுடியும் என்றும் ஏற்கனவே வகித்த இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து பதவி உயர்வு கோர முடியாது என்றும் 23-2-2009 அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்கிறேன்.

பரிசீலிக்கவேண்டும்

மனுதாரர் ஏற்கனவே பதவி உயர்வு கேட்டு 24-6-2011 அன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவை, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 8 வாரத்துக்குள் பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment