FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, December 12, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்

11.12.2013, திருநெல்வேலி
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.

ஸ்காட் நிறுவனம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

மையத்தின் பிற அரங்குகளை கோர்தா நிறுவனத் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன், ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார். 

Thanks to

No comments:

Post a Comment