04.12.2013, திருச்சி, :
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்று திருச்சி மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்துப் பேசுகை யில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ‘அனைவரும் மாற்றுத்திறனாளிகளை சமமாக கருத வேண்டும். அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தவறினால் ஏற்பட்டது இல்லை. 6 முதல் 12 வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி என அரசு அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளை பிரித்து பார்க் கக் கூடாது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் சமமாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகலாம். பொருளாதார சூழல் இல்லை என்றாலும், இவர்களுக்கு உதவிட சட்ட உதவி மையம் உள்ளது. அனைத்து மாநகர் மற்றும் தாலுகாக்களில் மாவட்ட சட்டப் பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என் றார்.
விழாவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி பார்த்தசாரதி, நிர்வாக முதன்மை அலுவலர் தனபால், விமானப் படை அதிகாரி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிஷப் ஹீபர், ஜமால் முகமது, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த என்சிசி மற்றும் மாணவர் படையினர் பங்கேற்ற பேரணியை நீதிபதி வேல்முருகன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்த பேரணி புத்தூர் முக்கிய சாலைகள் வழியாக பிஷப் ஹீபர் கல்லூரியை மீண்டும் சென்றடைந்தது.
Thanks to
No comments:
Post a Comment