26.12.2013, சென்னை:
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, எட்டு ஆண்டுக்கு முன், உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்து கழகங்கள், பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர், நம்புராஜன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, 2005ம் ஆண்டு, டிச., 29ம் தேதி, அப்போது போக்குவரத்து துறை செயலராக இருந்த சண்முகம், அனைத்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருந்தும், எட்டு ஆண்டுகளாக, கழகங்கள் இதை பின்பற்றாமல் இருந்துள்ளன. இந்த உத்தரவு விவரத்தை, மாற்றுத் திறனாளி பிரதிநிதிகளிடம், நேற்று தான் போக்குவரத்து துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். உத்தரவு விவரத்தை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிப்பதுடன், பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகையாகவும் வைப்பதற்கு, போக்குவரத்து மற்றும் மாற்றுத் திறனாளி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to

No comments:
Post a Comment