FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, December 19, 2013

மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை தற்காலிக நிறுத்தம் ஏன்? அதிகாரி விளக்கம்

19.12.2013 கோவை மாவட்டத்தில், மனவளர்ச்சிகுன்றிய மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை தற்காலிக நிறுத்தம் ஏன்? என்பதற்கு அதிகாரி விளக்கம் அளித்தார்.

32 ஆயிரம் மாற்று திறனாளிகள்

கோவை மாவட்டத்தில் சுமார் 32ஆயிரம் மாற்று திறனாளிகள் உள்ளனர். இதில் கடும்பாதிப்புக்குள்ளான (ஊனத்தின் அளவு 75 சதவீதத்துக்கு மேல்) நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இது தவிர மனவளர்ச்சி குறைபாடு (45 சதவீதத்துக்கு மேல்) உடைய தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கும், தசை சிதைவு நோயால் (40 சதவீதத்துக்கு மேல்) பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

உதவித்தொகை

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மன வளர்ச்சி குன்றியவர்களில் மொத்தம் 2641 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை வழங்காமல் உள்ளது. இதனால் மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்கும் பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது, மாதாந்திர உதவித்தொகை பெறும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மட்டும் உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு காரணம் அவர்களுக்கு உரிய வாழ்வுச்சான்றிதழ் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து பெற வேண்டி இருந்தது.

தடையில்லாமல் கிடைக்கும்
அதாவது உதவித்தொகை பெறும் மன வளர்ச்சி குன்றிய நபர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அவர்கள் இறந்து போன நிலையில் அவர்களின் பெயரை சொல்லி உதவித்தொகை தவறாக பெறப்படுகிறதா? என்பது குறித்த கணக்கெடுப்புக்காக அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அதற்கான தகவல்கள் பெறப்பட்டு உள்ளது. ஆகவே ஏற்கனவே நிலுவையில் இருந்த உதவித்தொகையுடன் இனிமேல் மாதந்தோறும் உதவித்தொகை தடையில்லாமல் கிடைக்கும்.

தேசிய அடையாள அட்டை
இது தவிர மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை அவசியம். ஆகவே அதற்காக ரேஷன் கார்டு நகல், அல்லது இருப்பிட சான்று, புகைப்படம் (இரண்டு) ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருக்கின்ற நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை பெற்றிருக்கும் மாற்று திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியத்துடன் வழங்கப்படும்.

வங்கிக்கடன்
இவர்கள் ஏற்கனவே வங்கிகளில் கடன்பெற்று நிலுவை தொகை இல்லாதவராக இருக்க வேண்டும். இது தவிர கல்வி உதவித்தொகை ரூ.1000-ம், திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு கால்களும் செயல் இழந்த 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகளாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment