FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, December 28, 2013

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குவதில் தாமதம்

விருதுநகர் ,28 December 2013,
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நடக்க முடியாதவர்கள், கை கால் செயலிழந்தவர்கள், பணி செய்ய முடியாதவர்கள், தசை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதித்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், கடும் ஊனமுற்றோர் 100 பேர், மனவளர்ச்சி குன்றியோர் 400 பேர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் 70 பேர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் என மொத்தம் 4630 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகையை வைத்து பெற்றோர் அல்லது உறவினர்கள் பராமரிப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதங்கள் வரையில் குறிப்பிட்ட நாளில் வழங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக உரிய நாளில் தொகை வழங்கப்படவில்லையாம்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்தாண்டு வரையில் ஒரு ஆண்டுக்கான தொகையை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வங்கி கிளைகளுக்கு பணம் விடுவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழாண்டு முதல் அந்தந்த மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் சரிபார்த்து கருவூலத்திற்கு பட்டியல் அனுப்பி, அங்கிருந்து பணத்தை பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரையில் பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால் தாமதம் ஆனாது.

தற்போது, பொறுப்பு அதிகாரி சரி பார்த்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.

தொழுநோயாளிகளுக்கான உதவித் தொகை அரசிடம் இருந்து வரவில்லையெனவும் தெரிவித்தார்.

Thanks to

No comments:

Post a Comment