சென்னை, 19 August 2014
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகையை விடுவிக்க மறுத்ததோடு, மாணவர்களை அலைக்கழித்ததாக திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளை மீது புகார் எழுந்தது.
வங்கி நிர்வாகிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றித்திறனாளிகள் சம்மேளனம் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தப்பட்டது.
அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆராய்ச்சி உதவித்தொகைகள் உள்ளிட்ட பிற உதவித்தொகைகளை விடுவிக்க, வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர், வங்கி வட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.
சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment