மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகைக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில புதிய நோய்களும் ரயில் கட்டணச் சலுகைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சலுகைகளைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய படிவம் ஏற்கெனவே ஜூலை 15-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட விவரம்:
1. கை, கால் ஊனமுற்றோர், 2. இடுப்புக்குக் கீழ் செயலிழந்தவர்கள், 3. ஒருவரின் துணையில்லாமல் பயணிக்க முடியாத நோயாளிகள், 4. ஒருவரின் துணையில்லாமல் பயணிக்க முடியாத மனநலம் பாதிக்கப்பட்டோர், 5. பார்வையற்றவர்கள், 6. காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாதவர்கள், 7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், 8. தலசீமியா பாதிப்பு உள்ளவர்கள், 9. இதயநோய் உள்ளவர்கள், 10. காசநோயாளிகள், 11. தோல் முடிச்சு நோய் உள்ளவர்கள், 12. தொற்றா வகை தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், 13. மிதமான, கடுமையான ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், 14. எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்கள்.
No comments:
Post a Comment