27.08.2014, மதுரை, :
இலவச வீட்டு மனை கேட்டு மது ரை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட காசி பார்வையற்றோர், உடல் குன்றியவர்கள் அமைப்பில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இதன் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் அலுவலர், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் இந்த அமைப்பினர், தங்கள் கோரிக்கை மனு குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அமைச்சரிடம் கடிதம் வாங்கி வந்தால் வீட்டு மனைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர் ந்து அமைச்சரிடம் கடிதம் பெற்று அதனை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை மனு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனைக் கண்டித்து இந்த அமைப்பைச் சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர் பாக ஆர்டிஓ ஆறுமுக நயி னார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந் தலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் தங்களு டன் நேரடியாக பேசினால் தான் மறியலை கைவிடு வோம் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறி தொடர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அமைப் பின் பிரதிநிதிகள் கலெக் டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலெக்டரிடம் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதே போன்று மனு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மேயரிடம் வழங்கினர்.
அதிகாரிகள் செய்த சமரசத்தை ஏற்று சுமார் 2 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் கலெக்டர் அலு வலக ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment