22.08.2014
மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற, கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: இரு கைகள் நல்ல நிலையில் உள்ள, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, தையல் சான்று நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் ஆக.30-ஆம் தேதிக்குள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை-20 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி எண்: 0452-2529695.

No comments:
Post a Comment