திருநெல்வேலி, 11 August 2014
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் இணைந்து ஒரு சமூக பாதுகாப்புச் சட்டத்தை மக்களவையில் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் பி.தியாகராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மருத்துவர் ராமகுரு, மாவட்டச் செயலர் எஸ்.குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவர் எம்.இசக்கி, மாவட்டப் பொருளாளர் கே.காசி, கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சங்க நிர்வாகிகள் கங்காதரன், ஆர்.கே.பெருமாள், பாலகணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment