FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, August 10, 2014

வாய் பேச முடியாத வாலிபர் திடீரென பேசிய அதிசயம்

10.08.2014, திருமலை:
பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்த லண்டனை சேர்ந்த பக்தருக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு வந்தது. திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த அதிசயம் நடந்தது. டெல்லியை சேர்ந்தவர் பிரத்தீமா. இவரது மகன் தீபக் (18). இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். மேலும், பிரத்தீமாவுக்கு பூஜா என்ற மகளும் உள்ளார். பிரத்தீமா தனது குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் குடியேறினர். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். ஸி300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர் சன்னதியில் இருந்து வகுலமாதா சன்னதிக்கு வந்தனர். அப்போது, தீபக் திடீரென பக்தி பரவசத்தில் Ôகோவிந்தா... கோவிந்தாÕ என கோஷமிட்டார்.

அதை சற்றும் எதிர்பாராத பெற்றோர், தங்கள் மகன் திடீரென பேசுவதை பார்த்து சில நொடிகள் திகைத்தனர். இந்த தகவல் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பரவியது. ஏழுமலையானின் அருளால் அற்புதம் நடந்துள்ளதாக பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பிரத்தீமா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சார்பில் பிரசாதம், சுவாமி படங்களையும் வழங்கினர். பிரத்தீமா கூறியதாவது: தீபக்கிற்கு பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது. வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தால் பக்தர்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என கூறினர். இதனால், 2002ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தோம். அப்போது, எனது மகனுக்கு பேசும் சக்தியை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினேன். லண்டனில் தீபக்கிற்கு பேச்சு வருவதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சரியான முறையில் பேச்சு வராமல் இருந்தது.

அவன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து வந்தான். இன்று திருப்பதி கோயிலில் வெங்டேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த பிறகு, ‘கோவிந்தா கோவிந்தாÕ என பேசினான். இது கடவுள் அருளால் எனக்கு கிடைத்த வரம். இவ்வாறு பிரத்தீமா கூறினார். திருப்பதி கோயிலில் பேச்சு வந்ததை தொடர்ந்து, தனது தாயார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீபக் மகிழ்ச்சியோடு பேசினார். அவர் கூறுகையில், ‘‘இதுவரை பேச முடியாமல் இருந்தேன். தற்போது சுவாமியின் அருளால் என்னால் பேச முடிகிறது’’ என ஆங்கிலத்தில் கூறிவிட்டு மீண்டும் ‘கோவிந்தா... கோவிந்தா’ என கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார்.

No comments:

Post a Comment