புது தில்லி, 24 August 2014
மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கு வரி விதிப்பில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய சமூக நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக மாநில சமூக நலத் துறை அமைச்சர்களின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கெலாட், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பது தொடர்பாக 7 அம்சத் திட்டங்களை முன்வைத்தார். அதில், அரசு அலுவலகங்கள், அரசு இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும்; மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment