FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, September 7, 2014

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை


திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த செவித்திறன் நிபுணர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் குழுமணி, குண்டூர், லால்குடி ஆகிய இடங்களை சேர்ந்த செவித்திறன் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத மாணவிகள் 3 பேர், தற்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் உள்ள காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் செவித்திறன் பாதிப்பு பற்றிய சான்றை புதுப்பிக்கவும், காதுகேட்கும் கருவி வாங்கவும் கடந்த 3ம் தேதி திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தங்கள் பெற்றோருடன் வந்தனர்.

அவர்களை மறுநாள் (4ம் தேதி) வரும்படியும், அப்போது ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி தருவதாகவும் செவித்திறன் நிபுணர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் செல்லம் கூறினார். 3 மாணவிகளும் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை வந்தனர். அப்போது, பலரை பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.

மாணவிகள் 3 பேருக்கு எந்த சோதனையும் செய்யவில்லை. கூட்டம் கலைந்து சென்றதும் பிற்பகல் 3 மணிக்கு செல்லம் ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக காது பரிசோதிக்கும் தனது அறைக்கு அழைத்தார். பெற்றோரை வரக்கூடாது எனக்கூறிவிட்டார். காதை பரிசோதிப்பது போல சோதனையை தொடங்கி, மாணவிகளின் உடைகளை களையச்செய்து நிர்வாணப்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

முதலில் என்ன நடக்கிறது என்பதை அறியாத மாணவிகள் சிறிது நேரத்தில் அதிகாரியின் தவறான நடவடிக்கையை புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து
உள்ளனர். காதுகேட்கும் கருவி வேண்டுமா னால் இந்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக தனித்தனியாக அழைத்து மாணவிகளிடம் செல்லம் மாலை 6 மணி வரை இவ்வாறு அத்துமீறி நடந்துள்ளார்.

இதில் ஒரு மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.சோதனை முடிந்து வெளியே வந்த மாணவிகள் இறுக்கத்துடன் காணப்பட்டனர்.வீட்டுக்கு சென்றதும் அழுது கொண்டே இருந்தனர். பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து சைகை மூலம் கூறி கதறி அழுதனர்.

அன்று மாலையே லால்குடி போலீசில் ஒரு மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். மற்ற மாணவிகளின் பெற்றோரிடமும் தெரிவித்து உள்ளனர். அவர்களும் தங்கள் மகள்களிடம் விசாரித்தபோது, செல்லம் 3 மாணவிகளிடமும் முறை தவறி நடந்தது தெரியவந்தது.

இதனால் கொதித்து போன பெற்றோர், மாற்றுதிறனாளிகள் நல அதிகாரி சாமிநாதனிடம் புகார் தெரிவிக்க நேற்று காலை, திருச்சியில் உள்ள மாற்று திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு சாமிநாதன் இல்லை.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன் னேற்ற சங்க தலைவர் ரமேஷ் பாபு, பொதுச்செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகி கள் பலர் அங்கு திரண்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளின் பெற்றோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிந்து, செல்லத்தை உடனடியாக கைது செய்து, ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் ஜெயராமன் அவரை சிறை யில் அடைக்க உத்தரவிட்டார்.

மாற்றுத்திறன் மாணவிகளிடம் அத்துமீறி நடந்த செவித்திறன் நிபுணர் செல்லம் கைது செய்யப்பட்டது குறித்து, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆணையாளர் மணிவாசகத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதற்கு முன் மாவட்ட மறுவாழ்வு அலுவலராக ஷியாமளா, கருணாகரபாண்டியன் ஆகியோர் இருந்தனர். வழக்கமாக மாவட்ட மறுவாழ்வு அலுவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு, வெளியூர்களுக்கு முகாம் நடத்த செல்வது வழக்கம். இதனால், அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகளை கண்காணிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. அதிகாரிகள் தொடர்ந்து அலுவலகத்தில் இல்லாதது இதுபோன்ற அத்துமீறலுக்கு காரணமாகி விட்டதாக மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட செல்லத்தின் அந்த அறை முழுவதும் கட்டைகள் அடித்து அதன்மீது பஞ்சுபொதி போன்ற அமைப்பிலான கட்டைகள் பொருத்தப்பட்டிருந்தது. உள்ளே இருந்து சத்தம் போட்டால் துளி சத்தம் கூட வெளியே கேட்காத அளவுக்கு அந்த அறை உள்ளது. ஏசி அறை என்பதாலும், ஹைடெக் சினிமாத் தியேட்டர் போல இருந்தது செல்லத்தின் அத்துமீறலுக்கு வசதியாக போய்விட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிலரை விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்தில் இருந்து கோர்ட் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். நடந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதனும் அங்கு வந்தார்.

அவர் தான் செல்லம் என கருதிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் சாமிநாதனை சரமாரி தாக்கினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து இவர் செல்லம் இல்லை, எனக்கூறியதை அடுத்து சமாதானம் அடைந்தனர்.

திருச்சி நீதிமன்றம் வளாகத்தில் தான் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் உள்ளது. அருகிலேயே மாவட்ட வனத்துறை அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், கோர்ட் போலீஸ் நிலையம், தீயணைப்புத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் என அரசு அலுவலகங்கள் நிறைந்த இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment